பிரபல புஹாரி ஹோட்டல் துபாயில் கோலாகலமாக திறப்பு.

பொதுமக்கள் விருந்தினர்களாக பங்கேற்று திறந்து வைத்தனர்.

23,669

 

இந்தியாவின் பிரபல முண்ணனி உணவகமான புஹாரி ஹோட்டல்  பொதுமக்கள் முன்னிலையில் துபாயில் அல் காராமாவில் திறக்கபட்டது.

1951ல் சென்னை மவுண்ட்‌ ரோடு புகாரி மிக பிரசித்தி பெற்ற ஹோட்டல் நிறுவனமாகும்.73 ஆண்டு  கால பாரம்பரிய மிக்க புஹாரி ஹோட்டல் சுவையான பிரியாணிக்கு பெயர் பெற்ற ஹோட்டலாகும்.

மவுண்ட் ரோடு புஹாரி ‌1951 ஆம் ஆண்டு முதல் உணவு பிரியர்களின் குறிப்பாக பிரியாணி பிரியர்களின் முதன்மையான தேர்வாக இன்று வரை இருந்து வருகிறது.

 

1965 ல் சுவையான ‌மசாலா கலந்த சிக்கன் அறிமுகம் செய்தது. அதுவே பின்னாளில் சிக்கன் 65 பெயர் காரணம் பெற்றது.

பல உணவு ரகத்தை அறிமுகம் செய்த புஹாரி ஹோட்டல் பல சுவையான உணவை உணவு பிரியர்களுக்கு  வழங்கி உள்ளது.

மூன்றாவது தலைமுறையாய் புகாரி ஹோட்டல் நீடித்தது வருவதற்கு காரணம் உணவை சமைப்பதில் தரத்தை எள்ளளவும் குறைத்தது இல்லை என்கிறார் அதன் உரிமையாளர் இர்ஃபான் புகாரி.

புஹாரி உணவகங்களின் பெருமைக்குரிய உரிமையாளர் இர்பான் புஹாரி பொதுமக்கள் உடன் ஹோட்டலை திறந்து வைத்தார்.

துபாயில் பல தமிழ் உணவகங்கள் உள்ள நிலையில் பு‌ஹாரி ஹோட்டல் வந்த இருப்பது உண்மையில் மகிழ்ச்சி தருவதாக பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.

சென்னையை சேர்ந்த அன்வர் புஹாரியில் மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 சுவைத்து போல் துபாயில் இனி கிடைக்கும் என்பது உண்மையில் மகிழ்ச்சி என்றார்.

பைசல் கூறுகையில் புஹாரி யில் மட்டன் பிரியாணி மட்டும் அல்ல பன்பட்டர் ஜாம் சமோசோ எனக்கு பிடித்த ஒன்று..சென்னையில் நண்பர்களோடு ஜாலியாக சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது என்றார்…

இந்தியா முழுவதும் 40 உணவகங்களை செயல் படுத்தி வரும்  புஹாரி முதல்முறையாக துபாயில் கால் பதித்து உள்ளது.