நாம் தமிழர் கட்சிக்கு *மைக்* சின்னமும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு *சைக்கிள் சின்னம்|தேர்தல் பணிக்காக 39 பொது பார்வையாளர்களையும், 20காவல்துறை பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

நாம் தமிழர் கட்சிக்கு *மைக்* சின்னம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு *சைக்கிள்

996

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் பணிக்காக 39 பொது பார்வையாளர்களையும், 20காவல்துறை பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா

சாகு, இதுவரை சி.விஜில் செயலி மூலமாக தேர்தல் தொடர்பாக 864 புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாத பொது மற்றும் அரசு இடங்களில் உள்ள சுவர்களில் உள்ள விளம்பரங்கள் 2,97,083 அகற்றப்பட்டுவிட்டதாகவும், தனியார் இடங்களில் உள்ள சுவர்களில் உள்ள 96,541 விளம்பரங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், தேர்தல் விதி மீறிய காரணத்திற்காக 16தனியார் கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்கு பதிதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இதுவரை, கட்சிகளில் உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் 159பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாம் தமிழர் கட்சிக்கு *மைக்* சின்னமும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு *சைக்கிள்* சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும், தமிழ்நாட்டிற்கு தேர்தல் பார்வையாளர் பணிக்காக 39தேர்தல்(பொது) பார்வையாளர்களையும், 20காவல்துறை பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் தெரிந்துகொள்ளும் விதமாக *suvidha* செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது தொடர்பாக விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக *saksham*செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

 

நாளை பிற்பகல் 12மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

 

சுபாஷ்சந்திரபோஸ் ராஜவேலன்

Seeman with Mike symbolValue Media Middle East -UAE