விரைவில் துபாயில் அபாகஸ் கணித திறன் போட்டி  G.K international நர்சரி பிரைமரி பள்ளி நடத்தும் -தாளாளர் தியா சுப பிரியா அறிவிப்பு.

5,871

Gkinternational

G.K international நர்சரி பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரபல உளவியல் வல்லுநர் Dr.மினி ராவ் ,ரின்ஷி உமா மகேஸ்வரி (கராத்தே 6டான் ) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் ஜீ‌கே இன்டெர்நேஷனல் நர்சரி பள்ளி சிறப்பான வகையில் தொடக்க பள்ளி படிப்பில் பல புதுமைகளை நடத்தி மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை தரமாக வழங்கி வருகிறது.

அப்பகுதியில் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கி வருவதில் தனித்து செயல்பட்டு வருகிறது.

அப்பள்ளியின் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் சிறப்பான வகையில் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • பள்ளியின் தாளாளர் தியா சுப பிரியா , அபாகஸ் போட்டிகளை பன்னாட்டு அளவில் ஒருங்கிணைத்து ஆண்டுத் தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் நடத்தி வருபவர் குறிப்பிட தக்கது.