கிருஷ்னகிரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது காங்கிரஸ் கட்சியின் பொது குழு உறுப்பினர் L சுப்ரமணியன் பேட்டி.

கிருஷ்னகிரி திமுக மாவட்ட செயலாளர்,‌சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ,வீயூகம் பல லட்சம் வாக்குகளை பெற்று தரும்.

9,797

 

திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு -புதுச்சேரி பத்து இடங்களை ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள்.

மக்களவைத் தேர்தல் 2024:

இந்தியா கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்

காங்கிரஸ் திருவள்ளூர் (தனி) (காங்) கடலூர் (காங்) மயிலாடுதுறை (காங்) சிவகங்கை (காங்) திருநெல்வேலி (காங்) கிருஷ்ணகிரி (காங்) கரூர் (காங்) விருதுநகர் (காங்) கன்னியாகுமரி (காங்) புதுச்சேரி (காங்)

திமுக கூட்டணி கட்சி தொகுதிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய‌ வேண்டும். எந்த வகையிலும் பகுதி வாரியாக வாக்குகள் குறைய கூடாது ,அப்படி குறைந்தால் அதற்கு அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு என்றும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படும் யென் திமுக தலைவரும் தமிழ் நாடு முதல் அமைச்சருமான முக ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களிடையே நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்க பட்டுள்ளது..

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ‌மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய எம் பி‌ யான செல்வகுமாருக்கு பதில் கோபிநாத் களம் காண்கிறார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக களம் காணும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திரு.K.கோபிநாத்.,EX MLA,அவர்கள் திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் அவர்களை சந்தித்து தேர்தல் வீயூகம் குறித்து பேசினார்.கோபிநாத் அவர்களை வரவேற்று திமுக ஆதரவோடு பெரும் வெற்றி பெற்று மக்களவையில் களமாட வாழ்த்தினார்.

 

சுறுசுறுப்பான கிருஷ்ணகிரி.

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலக பந்தல் அமைப்பதற்கான பணிகளை‌மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஏற்கனவே துவக்கி வைத்தது  தீவிர படுத்தியுள்ளார்.

அதே போன்று, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் ( WAR ROOM ) திறக்க பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவரும் பொது குழு‌ உறுப்பினரான சுப்ரமணியன் ,

 

 

 

 

கிருஷ்ணகிரி காங்கிரஸ் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் கூட்டணி கட்சியான திமுகவின் அசுர பலம் வெற்றியை ஏற்கனவே உறுதிசெய்து விட்டதாக தெரிவித்தார்..

சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன் .

News agency- Value Media Middle East