பி எஸ் ஏ ஸ்குவாஷ் டூர் போட்டி தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் வெள்ளி வென்றார்

103

பி எஸ் ஏ ஸ்குவாஷ் டூர் போட்டிகளில் ஒன்றான 10வது சுனில் வர்மா நினைவு ஸ்குவாஷ் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் வசிந்தில் உள்ள ஜிண்டால் மனமகிழ் மன்ற மையத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனையான ஷமீனா ரியாஸ் கால் இறுதிப் போட்டியில் 4வது நிலை வீராங்கனையான சுனிதா பட்டேலை 3க்கு 0 எனவும்,

அரை இறுதி போட்டியில் 6வது நிலை வீராங்கனையும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான பூஜா ஆர்த்தியை 3க்கு 1 என்ற ஸ்கோரில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் டெல்லியைச் சேர்ந்தவரும், முதல் நிலை வீராங்கனையுமான அனாஹத் சிங்கிடம் 0க்கு 3 என்ற செட்களில் தோற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.

இப்போட்டியில் 9வது நிலை வீராங்கனையாக இடம் பெற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி வெள்ளிபதக்கம் வென்ற ஷமீனா ரியாஸ் பிஎஸ்ஏ ஸ்குவாஷ் டூர் போட்டியில் முதல்முறையாக பதக்கத்தை கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஷமீனா ரியாஸ் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது இந்திய ஹாக்கி அணியின் தேர்வாளர்களில் ஒருவராகவும் உள்ள முகமது ரியாசின் மகள் ஆவார்.