சைக்கிள் சின்னம் கிடைக்க பாஜக உதவில்லை வாசன்‌ பேட்டி

சட்ட போராட்டம் நடத்தி பெற்றேன்

410
  • Gkvasanத.மா. க போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலினை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் வெளியிட்டார்

*ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால், ஈரோடு தொகுதியில் பி விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்*

*திமுக ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்ற வில்லை இதற்கு இடையில் புதிய வாக்குறுதி அளித்திருப்பதாக ஜி கே வாசன் விமர்சனம் செய்துள்ளார்*

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது பேசுவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும் ,

அவைகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிடுவதாகவும் ஈரோடு பகுதியில் பி விஜயகுமார் போட்டியிடுவார் எனவும் , ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் போட்டிடுவார் எனவும் , தூத்துக்குடித் தொகுதிக்கு மட்டும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து நாளை மறுநாள் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

 

மேலும் பேசிய அவர் 40 நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கூட்டணி கட்சியினரை சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்று மக்களை சந்திக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

வரும் 27 ஆம் தேதி திருக்கோவில் திருச்சபை பள்ளிவாசல் ஆகிய இடங்களில் இறைவழிபாடு செய்து விட்டு 28ஆம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக , தொடர்ந்து 21 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்று இலக்கோடு கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தங்கள் வேட்பாளராக கருதி அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்வோம் .

சைக்கிள் சின்னம் மீண்டும் பெறுவதற்கு கடுமையாக உழைத்ததால் தான் கிடைத்ததாகவும் எளிதாக கிடைக்கவில்லை எனவும் , திமுக சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில் மூன்று ஆண்டு ஆகியும் இன்னும் நிறைவேற்ற வில்லை.

மேலும் புதிதாக வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி மேற்கொள்ள நினைப்பதாக அவர் விமர்சித்துள்ளார் .

நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி மீண்டும் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் மற்ற மாநிலங்களை விட தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்து வருவதாகவும்,

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு,சமையல் எரிவாயு விலை குறைப்பு, விவசாய கடன் ரத்து கல்வி கடன் ரத்து போன்ற வாக்குறுதிகள் அளித்து இருப்பதாகவும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிணை நிறைவேற்ற வில்லை புதிய வாக்குறுதி கொடுப்பதற்கு தகுதியற்ற திமுக இருப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார் .

வாக்களித்த மக்களுக்கு பரிசாக பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மின்சார கட்டணம் உயர்வு என்ற பரிசினை அளித்து இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போதை பொருள் விற்பனையை தடுக்க முடியாத அரசாக திமுக இருப்பதாகவும் , தலைமை இல்லாத கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது.

பாஜகவின் சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியாது என்று ஒரு கட்சி கூறினால் அதற்கு மக்கள் வாக்கு சீட்டின் மூலம் பதில் அளிப்பார்கள். கொரோனா காலத்தில் மருந்து தயாரித்து உலகில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியதாகவும், நேர்மையும் வெளிப்பாட்டிற்கு சொந்தக்காரர்கள் எங்கள் வேட்பாளர்கள் எனவும் கேட்ட தொகுதிகளும் எங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற்றுக்கொண்டோம் மனநிறைவோடு இருக்கிறோம் .

டெல்டா மாவட்டத்தில் பலமாக இருக்கிறோம் மற்ற மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்த இந்த தொகுதியினை பெற்றுள்ளோம் .

ஆளுநர் தனக்கு வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களை கொண்டு சரியான முறையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்வார்.

தனக்கு வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களின்படி ஆளுநர் சரியாக தான் செயல்படுகிறார். மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் .

1.9.15 அன்று முதல் சைக்கிள் சின்னத்திற்கு வழக்கு தொடர்ந்து போராடி வருவதாகவும் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தனக்கு இந்த சின்னம் கிடைத்ததாகவும் இதற்கு பாஜக உதவி செய்யவில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

 

சுபாஷ்சந்திரபோஸ் ராஜவேலன்

Value Media Middle East -UAE