உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் அரிமாபட்டி சக்திவேல்.திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாபட்டி கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர் அதன்படி, அந்த ஊரில் இருப்பவர்கள் காதல் திருமணமோ அல்லது வேறு சாதியிலோ திருமணம் செய்யக் கூடாது. அப்படி செய்தால், அவர்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைப்பதோடு, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள். கிராமத்து இளைஞரான நாயகன் பவன், பக்கத்து ஊரைச் சேர்ந்த நாயகி மேக்னா எலனை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள அதனால் அவர் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறார், கட்டுப்பாடு மிக்க அரிமாபட்டி கிராமம் நாயகனின் காதல் திருமணத்திற்கு பிறகு மாற்றமடைந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் பவன் தனது கதாபாத்திரத்தை புரிந்து நடிக்க முயற்ச்சித்துள்ளார்
நாயகி மேக்னா தனது விழிகளாலும், புன்னகையாலும் பார்வையாளர்களை வசீகரித்துள்ளார்
சார்லி தனது அனுபவ நடிப்பை கொடுத்து சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்
பிர்லா போஸ் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றார் போல் குறைவில்லாமல் நடித்துள்ளார்
படத்தில் அரசியல்வாதியாக வலம் வரும் இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பார்வையாளர்களுக்கு சிரிப்பு வரவில்லை
மணி அமுதவன் இசை சிறப்பு
ஜெ பி மேன் கேமரா கண்கள் கிராமத்தின் இயற்கையை அழகாக படம் பிடித்துள்ளது