ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!

12

 

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக ‘ஒளடதம்’ படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். ‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.

சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில்
500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு ,அர்ப்பணிப்பு, என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளார்.

சினிமா என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக அவர் இதைச் செய்துள்ளார்.சினிமாவை யாரும் ஏனோ தானோ என்றோ அலட்சியமாகவோ பார்க்கக் கூடாது. தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளார் .இதைப் பார்க்கும்போது இது நாள் வரை படை திரட்டி வந்தவர், இப்போது போர் தொடுக்க இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

நேதாஜி பிரபுவின் இந்த அயராத உழைப்பின், நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவாகியுள்ள இந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கே…

காட்சி ஊடகங்கள் அனைத்திலும் முகம் காட்டும் வகையில் நேதாஜி பிரபு ஆர்வமாக இருக்கிறார்.