தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘ மை லார்ட் ‘ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை ஈர்த்திருக்கிறது. அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் – தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘மை லார்ட்’ படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்… டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.