‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது!

96

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ‘டெட்பூல் & வால்வரின்’ படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.

இந்தியாவில் ‘டெட்பூல் 1’ (40.79 கோடி ஜிபிஓசி) மற்றும் ‘டெட்பூல் 2’ (69.94 கிஆர் ஜிபிஓசி) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, ‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது. இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.

சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.

மார்வெல் ஸ்டுடியோவின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.