சஞ்சனா நடராஜன்: இந்தியத் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரம்

94

இயக்குனர் பா ரஞ்சித்தின் ‘சார்பேட்ட பரம்பரை’ திரைப்படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்தார், விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.

சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியில் மட்டுமல்ல வேறு மொழியிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் பேசும் சென்னை வாழ் பெண்ணாக இருந்தாலும், தற்போது வேறு சில மொழிகளிலும் நடித்து வருகிறார் அவற்றில் வெளிவர உள்ள படங்கள் தமிழில் ‘பாட்டில் ராதா,’. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிஜாய் நம்பியாரின் ‘போர்’ மற்றும் மலையாளப் படமான ‘டிக்கி டக்கா’.

நேற்று வெளியான ஜிகர்தண்டா 2 Double X அவருடைய கதாபாத்திரத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

திரையுலகில் அவர் தொடர்ந்து சவாலான பாத்திரங்களை ஏற்று புதிய தளத்தை உடைத்து வருவதால், இந்த திறமையான நடிகைக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.