செலிபிரிட்டி வாலிபால் லீக் போட்டி

138

திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக்’ போட்டி சென்னையில் வருகிற 8ம் தேதி நடைபெறுகிறது.

கே எஸ் டி ஸ்டுடியோஸ் என்ற அமைப்பு, சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஆதரவோடு முதலாவது தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக் போட்டியை சென்னையில் நடத்துகிறது. வருகிற (செப்டம்பர்) 8ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை ஸ்டார்ம்ஸ், மதுரை ஹரிகேன்ஸ், கோவை தண்டர்ஸ் ஆகிய மூன்று அணிகள் லீக் போட்டியில் விளையாடுகிறது.

சென்னை அணிக்கு மாகாபாவும், மதுரை அணிக்கு கே பி ஒய் தீனாவும், கோவை அணிக்கு ஜூனியர் எம்ஜிஆரும் கேப்டன்களாக உள்ளனர்.
இந்தப் போட்டிக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்பாடலை இயக்குனர் விஜய் மில்டன் வெளியிட்டார்.

திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று ஆக்ரோஷமாக விளையாடும் இந்த போட்டியில் வாலிபால் லீக் போட்டி வாலிபால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும், வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 50,000ம், ரன்னர் அப் ஆக வரும் அணிக்கு ரூ.25,000 பரிசாக வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் விளையாடப்படும் பந்துகள் மற்றும் வீரர்களுக்கான ஷூக்கள் அனைத்தையும் ‘நிவியா’ நிறுவனம் எங்களுக்கு உதவுகிறது என போட்டி குழு தலைவரும், திரைப்பட நடிகருமான கிஷோர், போட்டிக்கான கோப்பை அறிமுக விழா மற்றும் சீருடை அறிமுக விழாவில் பேசும்போது கூறினார்.