ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

95

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன. இந்த நேரத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறும்போது, “ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடம் இருந்து இவ்வளவு அன்பையும் வரவேற்பையும் ‘விடுதலை’ படக்குழு பெறுவது நெகிழ்ச்சியாக உள்ளது. ‘விடுதலை1’ எங்கள் எதிர்பார்ப்புகளை விடவும் அதிக வரவேற்பு பெற்றது. இந்தப் படம் வணிகம் மற்றும் பேரலல் சினிமாவிற்கு இடையேயான இடைவெளியைக் குறைத்துள்ளது. இதன் மூலம் எதிர்கால இயக்குநர்களுக்கு ஒரு ப்ளூப்ரிண்ட்டாக இந்தப் படம் மாறியுள்ளது என்பதை தொழில்துறை மற்றும் வர்த்தக வட்டாரங்களில் இருந்து கேட்பது எங்களுக்கு உற்சாகமாக உள்ளது.

‘விடுதலை 1’ மற்றும் ‘கருடன்’ படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரியின் கேரியர் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படமும் வெற்றியடைந்திருக்கிறது. இதுபோன்ற பல பாசிட்டிவான விஷயங்களோடு ‘விடுதலை2’ படத்தை ரசிகர்களுக்கு சிறந்த முறையில் வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த இரண்டாம் பாகத்தினை வெற்றிமாறன் இன்னும் செழுமைப்படுத்தி வருகிறார். இசைஞானி இளையராஜா சாரின் மேஜிக்கல் இசை இந்தக் கதைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் படத்தின் மதிப்பை தங்கள் நடிப்பின் மூலம் உயர்த்தி இருக்கிறார்கள். இவர்களுடன், ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் மற்றும் பல நம்பிக்கைக்குரியவர்கள் நடித்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக, மஞ்சு வாரியரின் நடிப்பு இந்த படத்தில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படும். நடிகர் கிஷோரின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் தீவிரமானதாக இருக்கும்” என்றார்.

ரெட் ஜெயண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை விநியோகிக்கவுள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப குழு:

இயக்குநர்: வெற்றிமாறன்,
இசை: இளையராஜா,
ஒளிப்பதிவு: ஆர். வேல்ராஜ்,
கலை இயக்குநர்: ஜாக்கி,
படத்தொகுப்பு: ராமர்,
ஆடை வடிவமைப்பாளர்: உத்ரா மேனன்,
ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன் & ஸ்டண்ட் சிவா,
ஒலி வடிவமைப்பு: டி. உதய குமார்,
விஎஃப்எக்ஸ்: ஆர். ஹரிஹரசுதன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜி. மகேஷ்,
இணைத்தயாரிப்பாளர்: வி. மணிகண்டன்,
தயாரிப்பாளர்: எல்ரெட் குமார்