தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

37

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான D.மதியழகன் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யவும் அருளட்டும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி:

தோழர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான நிலைப்பாடு மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும், தொடர்ச்சியான வெற்றிகளை பெறவும் வாழ்த்துகிறேன்.

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கட்டும்.

பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அருள்வாராக!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்