மேற்கு ஆசியாவின் மிக பெரிய அபுதாபி இந்து கோவிலில் ,6,500 ஆண்டுகள் பழமையான சப்ஃபோசில் ஓக் மரங்கள் நிறுவபட்டுள்ளன.

132

அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்து கோவிலின் நுழைவு வாயில் ஒரு பகுதியாகவும் சிறப்புமிக்க அதிசயமான சப்ஃபோசில் ஒக் எழு மரங்கள் ,அமீரகத்தின் மத நல்லிணக்க இந்து கோவிலுடன் இணைந்து இருப்பதன் மேலும் பெருமை அடைகிறது என்றால் மிகையில்ல..
இந்தியக் கற்சிலையின் உச்சமாகக் கருதப்படும் இக்கோயில், 27 ஏக்கர் பரப்பளவில் பரவி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் பக்தர்களை வருவார்கள் யென என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோவில் ஒரு பாரம்பரிய இந்து கோவிலின் அனைத்து அம்சங்களையும் அம்சங்களையும் உள்ளடகத்தியதோடு மிக‌மிக சரியான முறையில் நிறுவ‌பட்டிருக்கிறது.இது ஒரு முழுமையான கோவிலாக இருப்பதோடு மட்டுமில்லாமல்,
சமூக, கலாச்சார மற்றும் ஆன்மீக வளாகத்தின் அடையாள பகுதியாக வான் உயர்ந்து நிற்கிறது.
தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான பாலமாக கருதப்படும் இந்த மந்திர், செக் குடியரசின் 6,500 ஆண்டுகள் பழமையான ஏழு அரிய சப்ஃபோசில் ஓக் மரங்களையும் அமைத்திருக்கிறார்கள்
பிரபல செக் குடியரசின் கலைஞரான ஜரோஸ்லாவ் ப்ரோஷெக்கால் 2016 ஆண்டு கண்டறிப்பட்டது.
புதிய உயிர் பெற்ற மர்மமான சப்ஃபோசில் ஓக் மரங்கள், 6500ஆண்டுகளுக்கு முந்தியவை கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
நமது கிரகத்தில் காலநிலை மாற்றத்தின் முழு செயல்முறையையும் அதன் பரிமாணத்தை காட்ட கூடியதாக இந்த ஒக் மரங்கள் காட்டுகின்றன.
சில விஞ்ஞானிகள் சப்ஃபோசில் ஓக்ஸை மனிதகுலத்தின் காலநிலை வரலாற்றுக் குறிப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
. இதன் காரணமாய் ,லண்டனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகம், பாரிஸில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், வியன்னாவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், லண்டனில் உள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டன்ஸ் போன்ற உலகின் மிகவும் மதிப்புமிக்க அருங்காட்சியகங்கள் மற்றும் நிறுவனங்களில் சப்ஃபோசில் ஓக்ஸ் மரங்கள் இடம்பெற்றுள்ளது.
பல பிரபலமான உலக கலைஞர்கள் தங்கள் பெயரை இந்த கண்கவர் பொருளுடன் இணைத்து, மிகவும் மதிப்புமிக்க கண்காட்சிகள் மற்றும் கேலரிகளில் வழங்கப்படும் விலைமதிப்பற்ற கலைப் படைப்புகளை உருவாக்குகின்றனர். .
துபாயில் எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட அவரது மூன்று மீட்டர் உயர சிற்பமான மர‌சிற்பம் காட்சி படுத்த பட்டது.
2016 இல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட இந்த கண்கவர் பொருள், அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற இந்து கோவிலிலும் இடம்‌பெற்றிருப்பது மிக முக்கியமானதாக மாறி விட்டது.