ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுப்பப்பட்டுள்ள பிரம்மாண்ட இந்து கோவில் உலகின் மனித நேய சகோதரத்துவம் பறை சாற்றும் அற்புத பூமியாக திகழ்வததோடு புதிய வரலாற்றை அமீரகம் செதுக்கி உள்ளது..

66

துபாய், அபுதாபி,சார்ஜா,உமல் குயின்,அஜ்மன்,ராசல் கைமா எழு மாகாணங்களை உள்ளடக்கிய ஜக்கிய அரபு நாடுகள் அழைக்கபடுகிறது.
இவைகள் முழுமையாக இஸ்லாமிய நாடாக விளங்கினாலும் பல தரப்பட்ட மக்கள் தங்களின் இறைத்தன்மை வழிபாடுகளை நடத்தி கொள்ள அனுமதிபடுகிறார்கள்.

துபாய் டேரா எனப்படும் பகுதியில் சிறிய அளவில் சிவன் கோவில் ஐம்பது ஆண்டுகள் மேலாக இருந்தது.. தற்போது துபாய் ஜபல் அலி இடத்தில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
1997, ஆம் ஆண்டு இந்து மத ஆன்மீகத் தலைவர் பிரமுக் சுவாமி மகராஜ், ஷார்ஜாவில் உள்ள ஒரு பாலைவனத்திற்கு சென்று உரையாடிய போது,

அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே அன்பும் நல்லிணக்கமும் இருப்பதைப் பற்றி உணர்ந்து பேசிய அவர்,
“அபுதாபியில் ஒரு கோவில் கட்டப்படட்டும், அது நாடுகளையும், கலாச்சாரங்களையும், மதங்களையும், சமூகங்களையும் நெருக்கமாக்கட்டும்’தனது பிரார்த்தனையைச் தெரிவித்து இருந்தார்.

அவரின் அந்த பிரார்த்தனை கிட்டத்தட்ட சாத்தியமற்ற கனவாக இருந்த நிலையில் ‘அந்த கனவானது” தற்போது முழுமையாக நனவாகியுள்ளது” …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் கோயில் அமைக்க பட என்கிற ஆவலை விரும்பியதன் விளைவாக அபுதாபியில் பிரம்மாண்டமான இந்து கோவிலுக்கு அனுமதி கிடைத்தது .

சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்ட்டுள்ள இந்த கோவிலுக்கான நிலத்தை அமீரகம் தானமாக வழங்கி ,சமத்துவ சகோதர மத நல்லிணக்கதிற்கான மாபெரும் வரலாற்றை எழுதியுள்ளது..

மேற்கு ஆசியாவில் மிக பெரிய இந்து கோவிலாக அபுதாபி இந்து கோவில் உருவாக்கபட்டுள்ளது.

சுமார் 700 கோடி ரூபாயில் மதிப்பில் ஆயிரம் ஆண்டுகள் மேல் நீடித்து இருக்கும் வகையில் கற் கோவில் எழுப்ப பட்டுள்ளது.

பிரம்மாண்ட கட்டிடங்கள் ,வியத்தகு சாலைகள்,கண்ணை பறிக்கும் மின் விளக்குகள் இவைகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் அடையாளங்கள் அல்ல..மத நல்லிணக்கம் எடுத்துகாட்டாய் விளங்குகிறது என்பதன் பிரம்மாண்ட சாட்சியாக அபுதாபி இந்து கோவில் நிற்கிறது.

எல்லா மதத்தினரும் எல்லா தரப்பினரும் சகோதரத்துவமாக, அவர் அவர் அடையாளங்களை அச்சு பிசகமால் ,எவரும் எவரையும், மனம் கோணாமல் ஒன்றினைந்து வாழும் அற்புத தேசமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.

அனைவருக்கும் சம இடமளித்து அன்பு பாராட்டும் அழகிய ஜக்கிய அமீரக நாடு..அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அபுதாயில் அமைக்க பட்டு இந்து கோவில் விளங்குகிறது என்றால் அது மிகையில்லை..

அனைத்து மொழி, இனம், மதங்களை கடந்து அனைத்து தரப்பு வகை மக்களை அமீரகம் வாரி அரவணைத்துக் கொள்வது,
இயல்பான மதம் தாண்டி மனித நேய அன்பை ஒலித்து கொண்டே இருக்கிறது.
உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் ,தங்கள் சொந்த தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வை அமீரகத்தில் வசிக்கும் பிற நாடு மக்கள் உணருகிறார்கள்.

இங்கு வாழும் வெளிநாட்டவர்களில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர்.
பிற மதத்தினரின் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாக விளங்குவது மட்டுமில்லாமல் உலகிற்க்கே எடுத்துக்காட்டாய் இயல்பாய் இருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பப்படி வழிபடுவதற்கு இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், குருத்வாரா சீக்கிய கோவிலும் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள பர்துபாய், ஜெபல் அலி பகுதிகளில் இந்துக்கோவில்கள் மற்றும் குருத்வாரா உள்ளது. இந்த கோவில்களில் இந்தியாவில் வழிபடுவது போல் அனைத்து வழிப்பாட்டு சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.

2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்த போது, அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிட தக்கது.

இதைத்தொடர்ந்து துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடியில் (5.5 ஹெக்டேர்) இடம் அபுதாபி அரசு சார்பில் இந்து கோவில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. .
இதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பு வகித்த தற்போதைய அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.

இந்த கோயிலை கட்டுமான பணிகளை‌மேற் கொள்வதற்காக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்புக்கு முறைப்படி வழங்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியா உள்பட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் வரை மொத்தம் 1,200 க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்மாணித்து நிர்வகித்து வருகிறது.

அபுதாபிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை நேரில்‌ சந்தித்து கோயில் கட்டும் பணிகள் ,கோவில் கட்டுமான திட்டங்கள் ஆவலுடன் கேட்டறிந்தார். பின்னர்
2018-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி அபுதாபியில் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். .
பின்னர் நடைபெற்ற விழாவில் துபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோவில் மாதிரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜக்கிய அமீரகத்தில் உள்ள ஏழு மாகாணங்களை குறிக்கும் வகையில் எழு கோபுரங்களை உள்ளடக்கிய கோயில் அமைப்பு மாடல் அமைந்திருந்தது..

இக்கோயிலில் ,சுவாமி‌ நாராயணன் ,ராதா கிருஷ்ணன்,ராமா சீதா சிவா பார்வதி,ஜெகநாதன்,வெங்கடேஸ்வரா,அய்யப்பன் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அமீகரம் அதிக படியான வெப்ப நிலை உள்ள பகுதி என்பதால் அதிக படியான சூரிய வெப்பத்தை தாங்க கூடிய கற்களை எழுப்ப வேண்டும் என்கிற அடிப்படையில் கோயில் கற்கள் வைத்து எழுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் பிங்க் கற்கள் மணற் கற்கள் மட்டுமில்லாது.. இத்தாலிய பளிங்குக்கற்கள் உட்புறத்தில் அமைக்கபட்டுள்ளது..

கோயில்கள் 402 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது .ஒவ்வொரு தூணிலும் ராமாயணம், சிவபுராணம், பகவத்கீதை மற்றும் மகாபாரத
வரலாற்று புராணங்களை வடித்து உள்ளனர்,

பஞ்ச் பூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் யென‌ஐந்தும் அற்புதமாக காட்டும் வகையில்,அழகிய மாடம் கோயில் உட்‌புறத்தில் நிறுவபட்டுள்ளது.

விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னமான அமீரகத்தின் ஒட்டகமும் அதனோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் அற்புதமாக நிர்மாணிப்பதற்கு 800மேற்பட்ட கண்டெய்னர்களில் கற்கள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது..

மிக சிறந்த சிற்பிகள் வடிவு அமைப்பாளர்கள் 3000மேற்பட்டோர் கோயில் அமைக்கும் பணியில் ஈடுபடுத்த பட்டனர்.

700கோடி மேல் நிதி உதவி அளித்து ஜக்கிய அமீரக தேசம் அன்பின் வெளிப்பாடாக மனிதநேயத்தை உலகிற்க்கே பறை சாற்றும் அமைத்து இருக்கிறது..

“அபுதாபியில் அமைக்கபட்டுள்ள “இந்து கோவில்” அதை உருவாக்கியவர்களுக்கு,மட்டும் சொந்தமானது அல்ல, அதை பார்வையிடும் அனைத்து தரப்பு மக்களுக்கு சொந்தமானது என்றும் ,இந்த மக்களுடைய கோவில் யென -BAPS இந்து மந்திர் (கோயில்) திட்டத் தலைவர் பூஜ்ய பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்துள்ளார்.”

இங்கு வருகை தரும் ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் இடம் இது அமைவதோடு,இந்த கோவில் அன்பு மற்றும் நல்லிணக்க செய்தியை உலகமெங்கும் பரப்பும் தெரிவித்துள்ளார்..

மத்திய கிழக்கில் உள்ள முதல் பாரம்பரிய இந்து கற் கோவில் அபுதாபியில் முறைபடி‌பூஜைகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர‌மோடி‌ அவர்கள் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு கடந்த 14ம்தேதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் அமைக்கும் பணியில் அனைத்து தரப்பு மதத்தினரும் இருப்பது பெரிய ஆச்சரியத்தையும் இனம் புரியாத மகிழ்வை தருகிறது.
அற்புத நூணக்கங்களை‌ கொண்ட பிரம்மாண்ட கோவில் என்கிற சிறப்போடு பல தரப்பட்ட மதத்தினர் ஈடுபட்டுள்ளார்கள் என்கிற செய்தி மிக முக்கியமானது.

இந்த கோவில் ,பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் புரிதலின் சின்னமாக விளங்குகிறது. என்பதற்கு காரணம்..
ஒரு இஸ்லாமிய நாட்டின் ஆட்சியாளர் இந்து கோவிலுக்கு நிலம் கொடுப்பதை கற்பனை செய்து பாருங்கள்,
இந்த கோவிலின் முன்னணி கட்டிடக் கலைஞர் ஒரு கிறிஸ்தவ கத்தோலிக்கர்,
திட்ட இயக்குனர் ஒரு சீக்கியர்,
தலைமை ஆலோசகர் அடிப்படையில் நாத்திகர்,
அடித்தளத்தை வடிவமைத்தவர் ஒரு பௌத்த மததை சேர்ந்தவர்.
கோவில் இயக்குனர் ஜெயின்.
கோவில் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பார்சிகள்,”
இப்படி பார்த்து உருவாக்க பட்ட நல்லிணக்க கோவில் உலகில் இது என்றால் மிகையில்லை..
பண்பாட்டு பன்முகத்தன்மைக்கு ஒரு பிரகாசமான உதாரணமான இளஞ்சிவப்பு மணற்கல் கோயில், அவர்களின் மதம் அல்லது நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் திறந்திருக்கும் யென பூஜ்ய பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த கோவிலுக்கு வருகை தரும் ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை வரவழைக்கும் இடமாக இருப்பதோடு ,இந்த கோவில் அன்பு மற்றும் நல்லிணக்க செய்தியை உலகமெங்கும் பரப்பும்..

சுபாஷ்சந்திரபோஸ் ராஜவேலன்.
Editor -Value Media Middle East -UAE