ஆரஞ் பிச்சர்ஸ் தயாரித்துள்ள ‘வானரன்’ படத்தின் ஆடியோ உரிமையை லஷ்மி மூவி மேக்கர்ஸ் வாங்கியுள்ளனர்

74

ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரித்து, ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் வானரன் .

நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக, அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

குணச்சித்திர வேடத்தில் ஆதேஷ் பாலாநடித்துள்ளார்.

இந்நிலையில் அன்பே சிவம், புதுப்பேட்டை, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என 20க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட லஷ்மி மூவி மேக்கர்ஸ் ஆடியோஸ் ஆரஞ் பிச்சர்ஸ் தயாரித்த “வானரன் ” படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு: ஆரஞ்ச் பிக்சர்ஸ்’ ராஜேஷ் பத்மநாபன்இ சுஜாதா ராஜேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீராம் பத்மநாபன்
ஒளிப்பதிவு: நிரன் சந்தர்
இசை: ஷாஜகான்
பாடல்கள்: செந்தமிழ் படத்தொகுப்பு: வித்து ஜீவா
மக்கள் தொடர்பு: வெங்கட்