விஜயகாந்த் நடித்த மாநகர காவல் டிஜிட்டலில் வெளியாகி வசூலை அள்ளுகிறது!

112

விஜயகாந்த் உதவி கமிஷனராக நடித்த “மாநகர காவல்” திரைப்படத்தை
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1991 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரிலீஸ் செய்தது. இதில் நம்பியார், சுமா ரங்கநாத், நாசர் , லட்சுமி, ஆனந்தராஜ் , ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். எம். தியாகராஜன் டைரக்ட் செய்திருந்தார். மக்கள் தொடர்பு விஜயமுரளி மாநகர காவல் திரைப்படம் அன்று 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை படைத்தது.

32 வருடங்கள் கடந்த பின் குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து
உரிமை பெற்று கடந்த வாரம் ரிலீஸ் செய்தது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கட் கட்டணத்தை குறைத்து திரையிட்டனர். டிக்கட் கட்டணம் குறைந்து இருந்ததால் மக்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் அதிகரித்து திரையிட்ட தியேட்டர்களில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூலானது.

200 ரூபாய் டிக்கட் கட்டணம் இருந்தால் மக்கள் சுமையாக கருதுவதாக நினைத்தோம். அதனால்தான் 50 ரூபாய் மற்றும் 80 ரூபாய் கட்டணம் உள்ள தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். படம் நல்ல வசூலை தந்து கொண்டு இருக்கிறது. அதனால் தொடர்ந்து நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் ” என்று குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா கூறுகிறார்.