பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தங்கம். ஒரு கோடி பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி செய்து சாதனை

இலங்கை அகதிகளுக்கு 90 சதவீத வேலை. அதிரடி காட்டும் சென்னை தொழில் அதிபர் பவித்ரா.

15,344

“சுற்று சூழல்  தொழில் அதிபர் பவித்ரா” சாதனை.

கட்டுரை: சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன்.

உலகம் முழுக்க சுற்றுச்சூழலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதில் பிளாஸ்டிக் கழிவுகள் மிக முக்கியமானவை. உயரமான மலைகளாகட்டும், மகடுக்களாகட்டும்… ஆழமான குளங்கள்… கடலாகட்டும் அதன் தாக்கம் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு அங்கும் இங்கும் எங்கும் நிறைந்து விட்டன…

இது மனிதனின் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல… விலங்குகளின் வாழ்வியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாடு இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தி இரட்டிப்பாகி, தற்போது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 400 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சூழலியலை காக்கும் விதமாகவும், அதனையே தொழிலாகவும் மாற்றி தொடங்கப்பட்டது தான் இந்த HLR PET ஸ்டார்ட்அப் நிறுவனம்.

M.Tech பட்டம் பெற்ற இளம் பெண் பவித்ரா பாலாஜி என்கிற தொழில் முனைவோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சென்னை நகரில் இருந்து சுமார் 1 கோடி பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்து சாதனை படைத்துள்ளது.

நகரெங்கும் சேகரமாகும் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை வெப்பப்படுத்துதல் மூலம் உயர்தர மறு சுழற்சி முறையில் துகள்களாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

அரசு விதிகளின்படி மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் துகள்கள், மீண்டும் பாட்டில்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் பாலிஸ்டர் உடைகள் தயாரிக்க தேவைப்படும் நூல்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில அரசு மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட HLR PET நிறுவனம், தொழில்துறையில் சிறப்பு மற்றும் புதுமைக்கு ஒரு முக்கியமான அடையாளமாக விளங்குகிறது.

இளம் பெண் தொழில் முனைவோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் உள்ள பணியிடங்களில் 90% பெண்கள் பணி புரிகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடங்ப்பட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனம் இலங்கை அகதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நேர்மறையான பங்களிப்புகள் அளிப்பது பாராட்டு குரிய ஒன்றாகும்.

HLR சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை நிலைத்தன்மையை சமநிலையாக்கல் முயற்சியை தனது கடமையாக பொறுப்பாக ஏற்று செயல்பட்டு வருகிறது.

கடல் மற்றும் நில சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடைமுறை முயற்சிகளையும் செயல்படுத்துகிறது.

பிளாஸ்டிக் கழிவு குறைப்பு யுக்திகளையும், மறு சுழற்சி திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம் கழிவுகள் உருவாகுவதை குறைக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.

பூமிக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அழித்து 1 கோடி பாட்டில்களை மறுசுழற்சி செய்து புவியையும் இயற்கை சூழலையும் காப்பதில் தொடர்ந்து பயணிக்கிறது HLR PET தொழில் நிறுவனம் என்றால் மிகையில்லை. இதுகுறித்து பவித்ரா கூறுகையில் தொழிற் சார்ந்து பொருளாதாரம் சார்ந்து இல்லாமால் ,சமுக சார்ந்ததாக அதுவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனது கனவு .அது கொஞ்சம் தற்போது சாத்தியமாகி இருக்கிறது. விரைவில் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை எளிதில் அகற்றும் வண்ணம் திட்டத்தை கொண்டு வர உள்ளோம்..பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை வருவோருக்கு தங்க நாணய திட்டத்தையும் பணம் தரும் கொண்டு வர உள்ளோம்..மக்களின் விழிப்புணர்வுகாக இதை செயல் படுத்த உள்ளோம் என்றார்.

எனது அண்ணன் ராஜசேகர் ,  எனது தாயார் வழிகாட்டுதல், கணவரின் பங்களிப்பு இவை அனைத்தும் தொடர்ந்து செயல்பட  முக்கிய காரணம் என்றால் மிகையில்லை என்கிறார் பவித்ரா.