


SIBEC – தொழில் முனைவோர் அமைப்பின் சார்பில் துபாயில் பிரம்மாண்டமான பன்னாட்டு தொழில் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், துபாயின் முன்னணி ஊடக ஆளுமையும், கான் மீடியா சிட்டியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மேலும் “லயாலி துபாய்” இதழின் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகிக்கும் டாக்டர் முகமது கான் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் முகமது கான்,
“நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை வெறும் முதலீடு, விரிவாக்கம் அல்லது பணியாளர் எண்ணிக்கையுடன் மட்டும் முடித்து விடக் கூடாது.
உலகளவில் தங்களை ஒரு பிராண்ட் ஆக உருவாக்குவது இன்றைய கட்டாயமாக மாறியுள்ளது.
அதனை கூடுதல் செலவாக அல்ல, ஒரு முதலீட்டு செலவாக கருத வேண்டும்”
மேலும், மாநாட்டில் கலந்து கொண்ட தொழில்முனைவோர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர் முகமது கான் விரிவாகவும் தெளிவாகவும் பதிலளித்தார்.
அவரின் தொலைநோக்கு தலைமை, ஊக்கமளிக்கும் உரை மற்றும் உலகளாவிய பார்வை இந்த நிகழ்விற்கு பெரும் மதிப்பையும் அந்தஸ்தையும் சேர்த்ததாக பங்கேற்ற தொழில்முனைவோர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில்,250க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களையும் வணிக வாய்ப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை SIBEC மற்றும் INFOSKILLS இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.
மேலும், SIBEC அமைப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அனைத்து எமிரேட்களிலும் புதிய கிளைகளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல்,SIBEC – உலகளாவிய உச்சி மாநாடு 2026ஆம் ஆண்டு மே மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறும் என அதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்