டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது.

92

 

சென்னை : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் மலையாள ஒரிஜினல் சீரிஸான “நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்” சீரிஸினை ஸ்ட்ரீம் செய்யத்துவங்கியுள்ளது. அசத்தலான காமெடி ஜானரில், ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும், ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ சீரிஸ், ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சரவெடி காமெடியுடன் அசத்துகிறது
இந்த சீரிஸ்.

சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

கேரள மக்களின் வாழ்வில் திருமண பந்தமும் கலாச்சாரமும் சார்ந்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு காமெடி சீரிஸாக இந்த, “நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்” உருவாகியுள்ளது.

MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ் நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தை தரும் சீரிஸாக உருவாகியுள்ளது, இந்த பரபரப்பான சீரிஸை, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளியுங்கள்.

‘நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்’ (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) என ஏழு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கிறது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள், தங்கள் தாய் மொழியில் இந்த காமெடி சீரிஸை ரசிக்க முடியும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.