ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’ வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

44

 

ஹாரிஸ் ஜெயராஜ் அதிரடி இசையில் பால் டப்பா எழுதி பாடிய உற்சாகமிக்க ‘மக்காமிஷி’ பாடலுக்கு சாண்டி மாஸ்டர் துடிப்புமிக்க நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார்

Song Link: https://youtu.be/eF9LRFbkHLQ

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

 

‘மக்காமிஷி’ என்றால் என்ன என்று சமூக வலைதளங்களில் சுற்றி வந்த கேள்விக்கு கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தம் வரும் என தெரிவித்து ஹாரிஸ் ஜெயராஜ், பால் டப்பா மற்றும் சாண்டி மாஸ்டர் யூகங்களுக்கு எல்லாம் சில தினங்களுக்கு முன் முற்றுப்புள்ளி வைத்திருந்த நிலையில் இப்பாடல் சனிக்கிழமை (ஜூலை 20) அன்று வெளியிடப்பட்டது.

வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்றுள்ள ‘மக்காமிஷி’ பாடல் இளைஞர்களால் வைப் (vibe) செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு சமூக வலைதளங்களில் எக்கச்சக்க பார்வைகள், இதயங்கள் மற்றும் லைக்குகளை அள்ளி வருகிறது.

‘மக்காமிஷி’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை கண்டு மிகுந்த உற்சாகமடைந்துள்ள படக்குழவினர் ‘பிரதர்’ திரைப்படத்தின் இதர பாடல்களை அடுத்தடுத்து வெளியிட தயாராகி வருகின்றனர். ‘பிரதர்’ திரைப்படத்திற்காக ஐந்து பிரமாதமான பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான ஆல்பமாக இது இருக்கும் என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

‘பிகில்’, ‘நட்பே துணை’, ‘தடம்’ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை விநியோகம் செய்து, ‘தாராள பிரபு’, ‘சாணி காயிதம்’, ‘மத்தகம்’, மற்றும் ‘அகிலன்’ என தயாரிப்பிலும் முத்திரை பதித்து வரும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘பிரதர்’ படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழும் ஓடிடி உரிமையை ஜீ5 தளமும் பெற்றுள்ளன.

ஒரு இளைஞன் மற்றும் அவரது சகோதரிக்கு இடையேயான பாசப்பிணைப்பை கலகலப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லும் குடும்ப திரைப்படமான ‘பிரதர்’, ஜெயம் ரவியின் முப்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிரதர்’ படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் குமார், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’, ‘ஜெய் பீம்’, புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், எம் எஸ் பாஸ்கர், சதீஷ் கிருஷ்ணன், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால் மற்றும் மாஸ்டர் அஷ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘பிரதர்’ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘பிரதர்’ படக்குழுவினர் விவரம்

தயாரிப்பு நிறுவனம்: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்

எழுத்து, இயக்கம்:
ராஜேஷ் எம்

இசை:
ஹரிஸ் ஜெயராஜ்

நடிப்பு:
ஜெயம் ரவி
பிரியங்கா அருள் மோகன்
பூமிகா சாவ்லா
VTV கணேஷ்
நட்ராஜ் சுப்ரமணியன்
ராவ் ரமேஷ்
அச்யுத் குமார்
சரண்யா பொன்வண்ணன்
சீதா
சதீஷ் கிருஷ்ணன்
எம் எஸ் பாஸ்கர்
சுரேஷ் சக்ரவர்த்தி
விருத்தி விஷால்
மாஸ்டர் அஷ்வின்

நிர்வாக தயாரிப்பாளர்கள்:
கே.எஸ். செந்தில் குமார்
வி.குரு ரமேஷ்

விநியோகத் தலைவர்:
எஸ்.கிரண் குமார்

ஒளிப்பதிவு:
விவேகானந்த் சந்தோஷம்

படத்தொகுப்பு:
ஆஷிஷ் ஜோசப்

கலை இயக்குநர் :
ஆர்.கிஷோர்

நடன அமைப்பு:
சாண்டி, சதீஷ் கிருஷ்ணன்

பாடலாசிரியர்கள்:
தாமரை, பார்வதி மீரா, விக்னேஷ் ராமகிருஷ்ணா, பால் டப்பா

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள்:
எஸ்.சரவண குமார்
கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன்

ஆடை வடிவமைப்பாளர்கள்:
பிரவீன் ராஜா, பல்லவி சிங்

ஒலி வடிவமைப்பாளர்:
டி.உதயகுமார் Df.Tech

VFX:
ஆர். ஹரிஹர சுதன்

DI:
அஸ்வினி – புரோமோ ஒர்க்ஸ்

ஸ்டில்ஸ்:
முருகதாஸ்

ஒப்பனை :
பிரகாஷ்

வடிவமைப்புகள்:
ராஜா (டிசைன் பாயிண்ட்)

புரோமோ கட்ஸ்:
நந்தன் சூர்யா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்