சர்வதேச அளவில் சமையல் ஒலிம்பிக் உட்பட 3 வரலாற்று சாதனைகள் படைத்த சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் திரு.ஆர்.பூமிநாதன் ஆகியோர் கௌரவித்தனர்.

49

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  ஹயாட் ரீஜென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
ஜெர்மனியில் நடந்த  ஐகேஏ/சமையல் ஒலிம்பிக்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில்,  எமிரேட்ஸ் சலோன் கல்னியர் மற்றும் மலேசியா பேட்டில் ஆஃப் தி செஃப்ஸ் ஆகிய மூன்று சர்வதேச சமையல் போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக சென்னை அமிர்தா மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி கௌரவித்தார்.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடைபெற்ற ஐகேஏ/சமையல் ஒலிம்பிக் வரலாற்றில் 124 ஆண்டுகளில் முதல் தங்கம் வென்று சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

22 நாடுகளைச் சேர்ந்த சமையல் வல்லுநர்களின் கடும் போட்டியை எதிர்கொண்டு சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் இந்த சாதனையை படைத்தனர். இதில் சென்னைஸ் அமிர்தா 3 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்றனர்.

சென்னைஸ் அமிர்தாவின் தங்கமங்கை அமிர்தா ஸ்ரேயா அனீஷ் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி, புட் கார்விங்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் காட்சிப்படுத்துவதில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சென்னையின் அமிர்தா மாணவர்கள் 2024 மே 20 முதல் 22 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில், ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்ற, 27 வது எக்ஸ்போ கலினயரில் எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் சலூன் கலினயர் 2024 இலும் வெற்றி வாகை சூடினர்.

எமிரேட்ஸ் கலினரி கில்டு நடத்திய இந்தப் போட்டியில் அமீரகம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 911 சமையல் வல்லுனர்களுடன் போட்டியிட்டு, 39 பிரிவுகளில் கலந்து கொண்டனர். ஓட்டோ வீபிள் தலைமையிலான 23 நடுவர்கள் அடங்கிய குழு இந்த போட்டிகளில் வென்றவர்களை தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இது வேர்ல்ட் செஃப் அசோசியேஷன் சொசைட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த போட்டிகளில்  சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்கள் 2 தங்கம், 1 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை பெற்றனர்.