சாய்தன்ஷிகா நடிக்கும் “சட்டம் என் கையில்”

55

எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கக்கூடிய சர்வ சக்தி உள்ள ஒரு ஜமீன்தார் குடும்பத்திற்கும் நீதிக்காக போராடும் ஒரு ஒரு ஏழ்மை நிலையிலுள்ள பெண்ணிற்கும் நடக்கும் யுத்தம்.

தனி ஒரு பெண்ணாக நின்று சட்டத்தின் முன் போராடி தன் கையினால் தீர்ப்பு கொடுத்த வீர தீர பெண்ணின் கதை என்கிறார் தயாரிப்பாளர் D.ராஜேஸ்வரராவ்

ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் D.ராஜேஸ்வர ராவ் தயாரிப்பில் A.அபிராமு இயக்கியுள்ள இப்படம் ஆந்திராவில் அந்திம தீர்ப்பு எனும் பெயரில் உருவானது. தமிழில் சட்டம் என் கையில் எனும் பெயரில் வெளிவருகிறது

சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராமன், சத்யபிரகாஷ், தீவாளி தீபு, நாகமகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்

ஒளிப்பதிவு-
N. சுதாகர் ரெட்டி

இசை – கோட்டி
பாடல்கள், வசனம்-பத்மா
மக்கள் தொடர்பு – வெங்கட்

தயாரிப்பு-
D.ராஜேஸ்வர ராவ்

கதை திரைக்கதை இயக்கம்
A.அபிராமு

கமலஹாசன் நடித்து 1978 ல் வெளிவந்து வெற்றி பெற்ற சட்டம் என் கையில் படத்தின் தலைப்பையே இப்படத்திற்கு வைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்

படத்தின் சென்டிமென்ட் காட்சிகள் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்

மேலும் பாடல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் தனி முத்திரை பதிக்கும் என்கின்றனர் படக்குழுவினர்

இப்படம் இம்மாதம் (ஜூன் 21 இல்) வெளிவருகிறது