ரஹ்மான் பிறந்தநாளை கேரளாவில் கொண்டாடிய ரசிகர்கள்!

35

நடிகர் ரஹ்மானுக்கு தமிழ் நாடு, கேரளா என தென்னிந்தியாவில் பெண்கள் உள்பட மிக பெரிய ரசிகர்கள் பாட்டாளம் இருக்கிறது. குறிப்பாக கேரளாவில் பெண் ஆண் என அனைவரையும் உறுப்பினர்களாக கொண்ட ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இது திரிச்சூரை தலைமை இடமாக கொண்டு All kerala Evergreen Star Rahman Fans Welfare Association என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. ரசிகர்கள் மன்றம் வாயிலாக பல பொது நல தொண்டுகள் செய்து வருகின்றனர். இன்று ரஹ்மானின் பிறந்த நாள் முன்னிட்டு அவர்கள் கொச்சியிலுள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இடத்தில் இரத்த தானம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பல ரசிகர்கள் இரத்த தானம் அளித்தனர்.

மேலும், திரிச்சூர் அருகே உள்ள வடூக்கர என்ற கிராமத்தில் செயல் பட்டு வரும் பழம் பெரும் ” ஸ்நேஹாரம் ” என்ற அனாதைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்றோகளுடன் ரஹ்மானின் பிறந்த நாள் கேக்கு வெட்டி அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடினர். இவ்வேளையில் நடிகர் ரஹ்மான் அங்கு வசிக்கும் முதியோர்களுடம் வீடியோ கால் மூலமாக பேசி அவர்கள் ஒவ்வொருவரையும் உற்சாக படுத்தினார். ரசிகர் மன்ற தலைவர் சுபாஷ், துணை தலைவர் தீபு லால், செயலாளர் அஜயன் உண்ணி கண்ணன், பொருளாளர் பிரசூன் பிரான்சிஸ் மற்றும் மன்ற செய்தி தொடர்பாளர் ஷிஜின் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.