இயக்குனர் விஷால் குருநாதருடன் தொடங்கும் துப்பறிவாளன்-||

124

நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய துப்பறிவாளன் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை விஷால் அவர்கள் நடித்து இயக்குகிறார். விஷால் அவர்கள் நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜூன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் தென்னிந்திய மொழிகளில் இருந்து நடிகர், நடிகைகள் பலர் இணைகிறார்கள், இத்திரைப்படத்தை விஷால் அவர்கள் இயக்குனராக அவதரிப்பதால் இத்திரைப்படத்தின் கதையை பான் இந்திய திரைப்படமாக சிறப்பாக வடிவமைத்து வருகிறார்.