*பகலறியான் திரைப்படத்தின் டீசர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டார். படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்*

76

தமிழ் த்ரில்லர் திரைப்படமான பகலறியானின் டீசர் வெளியானது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தின் டீசர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் பகலறியான், தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள வெற்றி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பல சஸ்பன்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்பதாலும் பரவலான ரசிகர்களின் கவனத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் சரோவின் இசையில், அபிலாஷ் PMYன் ஒளிப்பதிவில் வெளிவர இருக்கும் பகலறியான் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோபி கருணாநிதி கலை
வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.