புதிதாக திறக்கப்பட்ட “அபுதாபி இந்து கோவிலில்” பல்லாயிரக்கணக்கான ‌மக்கள் குவிந்தனர் .பல்வேறு மதத்தினரும் ஒன்று கூடி வழிபட்டனர்.

117

அபுதாபியில் உள்ள BAPS இந்து கோவிலின் முதல் பொது ஞாயிற்றுக்கிழமையான நேற்று‌மட்டும் 65,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள இந்து சமூகத்திற்கான மிக முக்கியமான இடமாக விளங்கும் அபுதாபியில் உள்ள BAPS இந்து கோவில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் திறக்கபட்டது. பொது திறப்பு பின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் 65000‌மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.
காலை யில் 40,000க்கும் மேற்பட்டோரும் மாலையில் 25,000 பேரும் சாமி தரிசனம் செய்துள்ளாதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1200கார்கள் மற்றும் பேருந்துகள் நிறுத்த கூடிய வாகன வளாகத்தில் வாகனங்கள் முழுமையாக நிறுத்த பட்டிருந்தது.
கூட்டத்தை சமாளிக்க 2,000 பேர் தன்னார்வலர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு இலகுவாக தரிசனம் செய்ய உதவி செய்தனர்.
அதிக அளவில் கூட்டம் இருந்தாலும் ,யாரையும் தள்ளாமலும் பொறுமையாக வரிசையில் நின்றனர். பக்தர்கள் கோவிலுக்குள் அமைதியாக சென்று வழிபட்டதை காண முடிந்தது.

அபுதாபியைச் சேர்ந்த சுமந்த் ராய், கூறுகையில் “ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இதுபோன்ற அற்புதமான ஒழுங்கை நான் பார்த்ததில்லை. நான் மணிக்கணக்கில் காத்திருந்து நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன், ஆனால் நாங்கள் அற்புதமான தரிசனம் செய்து மிகுந்த திருப்தி அடைந்தோம். என்றார் அனைத்து BAPS தன்னார்வலர்கள் மற்றும் மந்திர் ஊழியர்களுக்கு தனது வாழ்த்துக்களை கூறினார்.

லண்டனைச் சேர்ந்த பிரவினா ஷா, அபுதாபியில் உள்ள BAPS இந்து கோவிலுக்கு தான் முதல் முறை‌வருவதாகவும், “எனக்கு ஒரு ஊனம் உள்ளது என்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இருந்தபோதிலும் ஊழியர்கள் அளித்த சிறப்பு கவனிப்பு குறிப்பிடத்தக்கது என்றார்.
மக்கள் கூட்டத்தை ஒரு மண்டலத்திலிருந்து அடுத்த மண்டலத்திற்கு அமைதியாக அழைத்துச் செல்வதை என்னால் பார்க்க முடிந்தது என்று கூறினார்.

கேரளாவைச் சேர்ந்த பால்சந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “நான் மக்கள் கடலில் தொலைந்து போவேன் என்று நினைத்தேன், எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்றார்.

பார்வையாளர்கள் அந்த அழகிய கோவிலை தரிசனம் செய்யவும், கூட்டாக தங்கள் பிரார்த்தனைகளை சிறப்பாக செய்தனர்.

அபிஷேகம் மற்றும் ஆரத்தி போன்ற மத சடங்குகளில் பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோவிலின் மிக நூட்பமான கட்டிடக்கலையைப் பார்த்து பலர் பிரமித்தனர். வண்ண வண்ண ஆடைகளில் நேர்த்தியாக வந்த பக்தர்களை காணும் போது பண்டிகை சூழ்நிலை போல் உணர்ந்தாக பக்தர் ஒருவர் தெரிவித்தார் .

40 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் நேஹாவும் பங்கஜும் தெரிவிக்கையில் “இந்த தருணத்திற்காக நாங்கள் காத்திருந்தோம் என்றும் இந்த கோவில் எதிர்பார்ப்புகளை தாண்டி இருப்பதாக தெரிவித்தனர்.
இது ஒரு உண்மையான அற்புதமான அனுபவம் . எங்கள் பிரார்த்தனைகளைச் செய்யவும் ஆன்மீகத்தை உணரவும் ஒரு அற்புத இடம் கிடைத்துள்ளதாக நாங்கள் முழுமையாக ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்! ” என்றனர்.

அமெரிக்காவின் போர்ட்லேண்டைச் சேர்ந்த பியூஷ், “இந்த கோவில் திறப்பு, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அர்ப்பணிப்புக்கு ஒர் அற்புத சான்றாகும். இது வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையின் அழகான பிரதிநிதித்துவாம விளங்குகிறது என்றார்.
மெக்சிகோவைச் சேர்ந்த லூயிஸ் கூறுகையில், “கற்களில் உள்ள கட்டிடக்கலை மற்றும் பூட்டான் விவரங்கள் அற்புதமானவை. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பார்ப்பதை நான் மிகவும் பாராட்டுகிறேன். அனைத்து மக்களும் வருகை புரிய வேண்டும் என்றார்.

சாது பிரம்மவிஹாரிதாஸ், கூறுகையில் ,பொதுமக்களுக்கான தொடக்க ஞாயிற்றுக்கிழமையின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், “புதிய பேருந்து சேவைகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் . இந்த கோவில் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கமாகவும், நல்லிணக்கத்தின் அடையாளமாகவும், அனைத்து பின்னணிகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்களை ஒன்றிணைக்கும் என்றார்.
மேலும், அபுதாபியில் பேருந்து முனையத்திலிருந்து இருந்து கோவில் வரை புதிய பேருந்து வழித்தடத்தை (203) அறிமுகப்படுத்தியதன் மூலம் மக்களை அணுகல் மற்றும் உள்ளடக்கத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு போற்ற கூடியது என்றார்.
கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை வளர்ப்பதில் நாட்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் ஆன்மீக மற்றும் கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பது மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னோக்கு சிந்தனை அணுகுமுறைக்கு ஒரு சான்றாக உள்ளது என்றார்
கோவிலின் கதவுகள் திறந்த நிலையில் இருப்பதால், அமைதி, ஆன்மீகம் மற்றும் சமூக உணர்வைத் தேடும் அனைவரையும் அது தொடர்ந்து வரவேற்கிறது என் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது‌

Subashchandrabose
Rajavelan –

Editor -Value Media Middle East UAE.

Bus Route:
From/To: Al Nehyan Bus Station (Abu Dhabi City)
Location: https://maps.app.goo.gl/nqQ12y83MxjKE5dS8?g_st=ic

To/From: BAPS Hindu Mandir, Abu Mureikha
Location: https://maps.app.goo.gl/XPL6mnPn9ZkYasn68?g_st=ic

அபுதாபி இந்து கோவில்: பார்வையாளர்கள் பின்பற்ற பட வேண்டிய விதிமுறைகள்


இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்க பட உள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு‌வருகிறார்.
மேலும் பல் வேறு மாநிலங்களுக்கு சென்று ,கோடிக்காண ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி நடத்தி வரும் மோடி, மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதற்கு மோடி‌அவர்களும் கட்சி தலைமை‌நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த 2014ல் மார்ச் மாதம் 5ம் தேதி அன்று மக்களவை தேர்தல் அட்டவணை வெளியிடபட்டது.
2019ல் மார்ச் 10ல்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்திய பிரதமர் மோடி வரும் மார்ச் 13ம் தேதி சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்
திட்டங்க…
கடந்த 7 நாட்களில் 2 வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி – நாளை சென்னை, நந்தனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்

பிப்ரவரி மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி நெல்லை மற்றும் பல்லடத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களில் 2 வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நாளை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இன்று பிரதமரின் பயணத் திட்டத்தை பொறுத்தவரைக்கும், பிற்பகல் மகாராஷ்டிராவில் இருந்து பிற்பகல் 1.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்லும் பிரதமர் மோடி அங்கு ஈணுலை…