மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் சென்னையில் கோலகலமாக துவங்கியது

706

14 நாடுகள் பங்கேற்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான 2வது மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று துவங்கியது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதன் முதலாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நடைபெற்றது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது

வெடரன் கிரிக்கெட் இந்தியா (வி.சி.ஐ) அமைப்பு சார்பில் 2வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 2ம் தேதி வரை நடைபெறும் இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.

இங்கிலாந்து, கனடா, தென்கொரியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஜிம்பாவே, இதர உலக அணி, வேல்ஸ், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

45 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும் இந்த போட்டிகள் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெறுகிறது.

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர்களும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஸ்கோரர்களும் இந்த போட்டிகளுக்கு பணியாற்றுகின்றனர்.

மூத்தோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க விழா இன்று (18ஆம் தேதி) மாலை 6 மணி அளவில் விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட் வளாகத்தில் நடைபெற்றது.

இதன் துவக்க விழாவில் 12 அணிகளின் கேப்டன்கள், மேலாளர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கோப்பை அறிமுக விழாவும் நடைபெற்றது.