பான் இந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராகினி திவேதி!

91

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராகினி திவேதி. கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நிமிர்ந்து நில், கடந்தாண்டு சந்தானத்துடன் கிக் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் உள்பட இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் மோகன்லால் உடன் பான் இந்தியா படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். சிரஞ்சீவி நடித்த போலோ சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார்.