AICC ROCG இன் தெற்கு மண்டலத்து வருடாந்திர கருத்தரங்கு, ROCG தமிழ்நாடு கூட்டமைப்புடன் (ATNROCG) இணைந்து, ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் நிகழ்பெற்றது.

115

யு.கே.வில் உள்ள ‘தி ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டட்ரிஷன் அண்ட் கைனகாலஜிஸ்ட் (RCOG)’ என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனமாகும். யு.கே.விற்கு வெளியே, மகப்பேறு மருத்துவர்கள், மகளிர் நோய் மருத்துவர்கள் என அதிக RCOG உறுப்பினர்களைக் கொண்ட நாடு இந்தியாவே! AICC ROCG இன் தெற்கு மண்டலத்து வருடாந்திர கருத்தரங்கு, ROCG தமிழ்நாடு கூட்டமைப்புடன் (ATNROCG) இணைந்து, ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் நிகழ்பெற்றது.

இந்தக் கருத்தரங்கில், சென்னையிலுள்ள சீதாபதி க்ளினிக் & ஹாஸ்பிட்டலின் சீனியர் OBGYN-ஆன மருத்துவர் உமா ராம் அவர்களை, AICC RCOG இன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியர் OBGYN-ஆன அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சுமனா மனோகர் அவர்கள் தெற்கு மண்டலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். RCOGஇன் தலைவரான மருத்துவர் Ranee Tahkkar, லண்டனில் இருந்து காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார். தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாட்டு திட்ட இயக்குநரான திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

பெண்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பைக் குறித்த ஆலோசனைகளும், அதை மையப்படுத்திய உரைகளுமே கருத்தரங்கின் கருப்பொருளாகும். தாய் மற்றும் சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும், உலகளாவிய இனப்பெருக்க ஆரோக்கியத்தை உதுதி செய்தலும், கருத்தரங்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளாகும். நோயாளியின் பாதுகாப்பே இலக்குகளில் முதன்மையானது என்பதால், அதுவே கருத்தரங்கின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கில், இரண்டு பயிலரங்குகள் நடைபெற்றன. ஒன்று, கர்ப்பப்பை மற்றும் அதிக சிக்கலான பிரசவம் குறித்தும்; மற்றொன்று, வெஜினல் சொசைட்டி ஆஃப் இந்தியக் கூட்டமைப்பின் பெண் பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை குறித்தும் பயிலரங்கு நிகழ்ந்தன. தனியார் மருத்துவமனைகள், PCIME இல் பதிவு செய்வதற்காக ஓர் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு சர்வதேச மற்றும் பல புகழ்மிக்க பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, பிள்ளைப்பேற்று வலி, பிரசவம், மகளிர் நல அறுவை சிகிச்சை, மற்றும் நவீன சிகிச்சை முறைகள் ஆகியவைப் பற்றி உரையாற்றினர். சமீபத்தில் ரமோன் மக்சேசே விருது பெற்ற பத்மஸ்ரீ மருத்துவர் ரவி கண்ணன் அவர்கள், புற்றுநோய் தடுப்பிற்கான சமூகப் பங்களிப்பைக் கட்டமைப்பது பற்றி உரை நிகழ்த்தினார்.