கமல்ஹாசன் KH237 திரைப்படத்தில் இணையும் ஸ்டண்ட் சகோதரர்கள்

108

உலகநாயகன் கமல்ஹாசனும் ஆர்.மஹேந்திரனும் இணைந்து தயாரிக்கும் KH237 திரைப்படத்தில்ஸ்டண்ட் சகோதரர்கள் அன்பறிவ் இணைகிறார்கள்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தனது ஐம்பத்தைந்தாவது தயாரிப்பாக KH237 திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் சகோதரர்களான அன்பறிவ் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக இந்தப் படத்தை கமல்ஹாசனும் ஆர்.மகேந்திரனும் தயாரிக்கிறார்கள்.

இந்தியத் திரையுலகின் ஸ்டண்ட் பிரிவில், அன்பறிவ் முக்கிய இடம் வகிக்கிறார்கள். ஸ்டண்ட் இயக்குனர் என்ற இடத்திலிருந்து அவர்கள் திரைப்பட இயக்குனர்களாக முன்னேறுவது அவர்களுடைய அர்ப்பணிப்புக்கும், திறமைக்குமான நற்சான்று. KH237 திரைப்படத்தின் வழியாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் சிறந்த திரைப்படப் பங்களிப்பு, இன்னும் மேம்படும். அன்பு மணியும், அறிவு மணியும் இந்தப் படத்தை இயக்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

திரைப்பட உருவாக்கத்தில் இதன் மூலம் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஸ்டண்ட் காட்சிகளை நேர்த்தியாக உருவாக்குவதற்காகக் கடுமையாக உழைக்கும் அன்பறிவ் இணையின் அர்ப்பணிப்பு இந்தத் திரைப்படத்திலும் நிச்சயம் வெளிப்படும்.

சிறந்த நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான கமல்ஹாசன்: “திறமைசாலிகளாக அறியப்படும் இருவர் இயக்குனராக KH237 படத்தில் அவதாரம் எடுப்பதில் பெருமைப்படுகிறேன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக அவர்களை வரவேற்கிறேன்,” என்றார்.

ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ்: “அற்புதங்கள் நிகழ்கின்றன. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு அமைந்தது கனவைப் போலிருக்கிறது” என்றார்கள். அதிரடிக் காட்சிகள் நிறைந்த படமாக KH237 ரசிகர்களுக்கும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஓர் அற்புதமான காட்சியனுபவமாக இருக்கும் என்பது உறுதி. உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும். புதிய இயக்குனர்களின் திறமையைக் கண்டறிந்து, திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் உலகநாயகன் அவர்களை மிகச் சிறந்த இயக்குனர்களாக உருவாக்குகிறார்.

மிகுந்த உற்சாகத்துடனும், மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும், இரட்டையர்கள் அன்பறிவ் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து, இயக்குனர்களாகத் தங்கள் திறமையை வெளிப்படுத்தக் காத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த படங்களை உருவாக்கும் எங்கள் இலக்குக்கான நற்சான்றாக இந்தப் படம் அமையும்.

KH237 தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம், மற்றும் கன்னடத்தில் 2025-ஆம் ஆண்டில் வெளியாகும்.