“குல் ரஞ்சித்” தயாரிக்கும் “சம்ஹாரா” படத்தின் டைடில் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள

102

டார்க் ரூம் புரடக்சன் நிறுவனம் “குல் ரஞ்சித்” தயாரிக்கும் “சம்ஹாரா” படத்தின் டைடில் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதை புதுமுக இயக்குநர் “விஜய் விக்னேஷ்” இயக்கவுள்ளார். இதில் புதுமுக நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தின் டைடில் போஸ்டரை இயக்குநர் & நடிகருமான திரு. பாக்கியராஜ், பாடகர், வேல்முருகன், நரேன், மாஸ்டர் மகேந்திரன், லொள்ளு சபா ஜீவா, இவர்கள் அனைவரும் 01/01/2024 அன்று வெளியிட்டுள்ளனர். இதை அடுத்து இத்திரைப்படம் ஜனவரி மார்ச் மாதம் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கவுள்ளது. மிக பிரமாண்டமான முறையில் செட் அமைத்து எடுப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் ஜெய்சன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ML சுதர்சன் இசை அமைக்க, ஆக்சன் பில்டப் ரவிகுமார் சண்டை காட்சிகள் அமைக்க, விது ஜீவா படத்தொகுப்பு செய்ய, அவதார் வசனம் எழுத மக்கள் தொடர்பு நித்திஷ் ஶ்ரீ ராம் செய்ய இத்திரைப்படம் தயாராக உள்ளது. மேலும் அடுத்தடுத்த விவரங்களை பின் வரும் காலங்களில் அறிவிப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்…