வித்தியாசமான தலைப்புடன் வெளிவரவுள்ள சிங்க முகம் யானை பலம்!

170

வதர்ஷா பிக்சர்ஸ் வினோத் சங்கரபாண்டியன், முத்து கணேஷ் வழங்கும் சிங்க முகம் யானை பலம். சஞ்சய் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் சூர்யா நடித்த ஸ்ரீ ஏவிஎம் -ன் அன்பே அன்பே உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார் , மேலும் தூத்துக்குடி வீரமும் வீரமும் சத்யராஜ் நடித்த கவுரவர்கள் போன்ற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சிங்க முகம் யானை பலம் என்ற படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார். ராஜா மதிமோகன் மற்றும் திலீப் குமார் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். ராம் கோபாலகிருஷ்ணன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் Title -லுக் போஸ்டரை நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் நடித்த நடிகர் நடிகையர் பற்றிய விவரம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.