செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !!

149

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !!

புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்

.

 

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.

இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் E ராகவ் எடிட்டிங் செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார். படத்தின் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.