சென்னையில் தேசிய அளவிலான நடனப்போட்டியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தொடங்கி வைக்கிறார் வெற்றிப்பரிசாக 10லட்சம் பரிசுத்தொகையும் பொருட்களும் வழங்கப்படவுள்ளது*

160

சென்னையில் மாயா யுனிவர்ஸ் நடத்தும் தேசிய அளவிலான GOD – (Greatest Of Dance) நடனப் போட்டி வரும் டிசம்பர் 2,3 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இதற்கான பத்திரிகை செய்தியை வெளியீடு:

சென்னையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவரும், தொழில் முனைவோருமான டாக்டர் சரண்யாவின் முன்னெடுப்பான Maya Universe, தேசிய அளவிலான நடனப்போட்டியான GOD – Greatest Of Dance போட்டியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இந்தியாவின் பலதரப்பட்ட கலாசார வகைகளின் கலைத்துவத்தை வெளிக்கொண்டு வரும் மாபெரும் நடனக் கொண்டாட்டமாய் GOD நிகழ்சசி நடைபெற இருக்கிறது. பலதரப்பட்ட கலாசாரங்கள், வடிவங்கள் மற்றும் அமைப்புகளின் தொகுப்பாக திகழும் மேற்கத்திய நடனத்தை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கவும் இம்மாபெரும் முயற்சி நடத்தப்படுகிறது.

டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நடனப்போட்டி, அபரிமிதமான நடன திறமைகளை ஒன்றிணைக்கவும், பல்வேறு நடன வடிவங்களை வெளிப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதிலும் உறுதி அளிக்கிறது.

இளம் நடனக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பெரிய அளவில் போட்டியிடவும், தன்னார்வலர்கள் பலருடன் இணைந்து தேசிய அளவிலான பெரும் வாய்ப்பாக மிளிர்கிறது.

அனைத்து வயதினருக்காக உருவாக்கப்பட்டுள்ள போட்டிகளில், நடனக்கலையின் பரந்த தனித்துவ வகைகளின் திறன்களை வெளிக்கொணரும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒருவர்க்கொருவர் மோதும் நடனப்போரில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான நடனப்போர் பிரிவில் திறந்தநிலை மற்றும் ஹிப் ஹாப் வகைகளில் போட்டி நடத்தப்படவுள்ளது.

அதேபோல், நடன அமைப்பின் அடிப்படையில் நிகழும் போட்டியில் சிறுவர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிரத்யேக பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

போட்டியின் சிறப்பம்சங்கள்-

Irudhi Suttru Extreme என்ற பெயரிலான நடனப்போரின் இறுதிச் சுற்று, திரு.சுதன் மற்றும் க்ரிஷ் தலைமையில் சென்னை பெரம்பூரில் இயங்கும் The Chennai Dance Palace-ன் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது.

நடன வகைகளில் திறந்தநிலை மற்றும் ஹிப்ஹாப் பிரிவுகள் சிறுவர்கள், ஆண்கள் மற்றும் அனைத்து பெண்கள் அணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவில் புகழ்பெற்ற நடன இயக்குநர்களான ரூவெல் டாவ்சன் வ்ரிந்தானி, பிரவின் ஜி, சம்போ முகர்ஜி, அகன்க்‌ஷா சர்மா உட்பட 10 பேர் நடுவர்களாக ஒரே மேடையில் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் அளிக்க உள்ளனர்.

முதன்முறையாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் பங்கேற்பாளர்களை கௌரவப்படுத்தப்பட உள்ளன.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க, புகழ்பெற்ற சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அந்த வரிசையில் திரு.மா.மதிவேந்தன், வனத்துறை அமைச்சர். புகழ்பெற்ற நடன இயக்குநர் பாபா பாஸ்கர், நடிகையும் நடனக் கலைஞருமான திருமதி சங்கீதா க்ரிஷ், அபிமான நகைச்சுவை நடிகர் விஜய் டிவி புகழ் உட்பட பல்துறை வித்தகர்கள் சிறப்பிக்க உள்ளனர்.

இதில் பங்கேற்று தங்கள் நடனத் திறனை வெளிப்படுத்த விரும்புவர்களுக்கு பதிவுச்சீட்டு உள்ளிட்ட விவரங்களை பெற 9962587788, 9962507788 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: info.godance23@gmail.com, mayauniverse23@gmail.com

இன்ஸ்டாகிராம் : @god_greatestofdance.india, @mayauniverse_.

புகழ்பெற்ற நடன நிகழ்வின் தொடக்கத்தில், நடனக் கலையின் தனித்துவம் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் வாயிலாக வெளிப்படவுள்ள தருணங்களை அனுபவிக்க, GOD – Greatest Of Dance நடனப் போட்டி மூலம் ஒன்றிணையுங்கள்…