பான் இந்தியா ஆக்ஷன் படமாக கவனம் ஈர்க்கும் ஹரோம் ஹரா

160

ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் எஸ்.எஸ்.சி. தயாரித்திருக்கும் படம் ஹரோம் ஹரா. இந்த படத்தின் கதாநாயகனமாக சுதீர் பாபு நடிக்கிறார். ஞானசேகர் துவாராக இயக்கும் ஹரோம் ஹரா திரைப்படத்தின் டீசரை பிரபாஸ், மம்மூட்டி, டைகர் ஷெராஃப், விஜய் சேதுபதி மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் கன்னடா மொழிகளில் வெளியிட்டனர்.

டீசர் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், மாஸ் சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன. 1980 காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்ற கதையம்சம் கொண்ட ஹரோம் ஹரா படத்தை இயக்குனர் ஞானசேகர் துவாரகா ஒவ்வொரு காட்சியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் படி கதையை தேர்வு செய்திருக்கிறார். இவற்றுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில், வசனங்களும் பட்டையை கிளப்பும் வகையில் உள்ளன.

பல எதிரிகள் தனது வீழ்ச்சிக்காக காத்திருக்கும் சூழலில், சாதாரண மனிதனாக இருந்து, நகரின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உருவெடுக்கும் வகையில் சுப்ரமணியம் என்ற கதாபாத்திரத்தில் சுதீர் பாபு நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாள்விகா ஷர்மா நடித்துள்ளார். மேலும் லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் அர்ஜூன் கௌடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தையும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார். இவருடன் ஒவ்வொரு காட்சியிலும் வலுப்படுத்தும் வகையில், சைத்தன் பரத்வாஜ் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார். தயாரிப்பு மேற்பார்வையிலும் சிறப்பான பணி மேற்கொள்ளப்பட்டு இருப்பது டீசரில் அம்பலமாகி இருக்கிறது.

ஹரோம் ஹரா படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது.

நடிகர்கள் விவரம்: சுதீர் பாபு, மாள்விகா ஷர்மா, சுனில், ஜெ.பி. அக்ஷரா கௌடா, லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் அர்ஜூன் கௌடா.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

எழுத்து, இயக்கம் – ஞானசேகர் துவாரகா
தயாரிப்பாளர் – சுமந்த் ஜி நாயுடு
இசை – சைத்தன் பரத்வாஜ்
ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்
படத்தொகுப்பு – ரவிதேஜா கிரிஜலா
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ்
மக்கள் தொடர்பு – சதிஸ் குமார்.

Harom Hara Teaser