‘காந்தாரா -சாப்டர்1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியீடு

183

தெய்வீகத்துடன் கூடிய ‘காந்தாரா- சாப்டர் 1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்யேக டீசரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ‘காந்தாரா ஏ லெஜன்ட்’ எனும் திரைப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘காந்தாரா- சாப்டர் 1’ எனும் படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவரவிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்யேக காணொளி தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது தீவிரமிக்க மற்றும் தெய்வீக தன்மையுடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் அச்சுறுத்தும் வகையிலான மற்றும் வசீகரிக்கும் தோற்றத்தைக் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்… இயக்குநர் தனக்காக உருவாக்கிய தொலைநோக்கு உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் எதிரொலித்த பழக்கமான கர்ஜனை மீண்டும் இந்த டீசரில் இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு புராண கதையின் பிறப்பிற்கான பின்னணியை உருவாக்குகிறது. மேலும் புதிய அனுபவத்தின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது.

டீசரில் கதையின் நாயகனான ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரத்தின் தீவிர கண்ணோட்டத்தில் பார்வையாளர்களை மூழ்கடித்து, சஸ்பென்ஸ் மற்றும் சூழ்ச்சிகள் நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இது பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு பார்வையாளர்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்திய மயக்கும் ஆத்மார்த்தமான இசை… இந்த புதிய திரைப்படத்தின் காணொளியில் மீண்டும் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘காந்தாரா – சாப்டர் 1’ திரைப்படம் வெளியாகும் ஏழு மொழிகளில் ஒவ்வொன்றையும் பிரத்யேகமாக குறிப்பிடும் வகையில் ஏழு வெவ்வேறு இசை ராகங்களுடன் டீசர் நிறைவடைகிறது.

‘காந்தாரா’ கடந்த ஆண்டு உலகளாவிய சினிமாவில் புயல் போல் தாக்கியது. மனித குலத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான சிக்கலான தொடர்பை ஆராயும் அதன் நாட்டுப்புற பாணியிலான கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பான் இந்திய அளவிலான சினிமா அனுபவங்களை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் புகழ்பெற்ற ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘காந்தாரா – சாப்டர் 1’ மூலம் மீண்டும் தெய்வீகத்துடன் கூடிய அனுபவ எல்லையை மறு வரையறை செய்கிறது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக ஹோம்பலே ஃபிலிம்ஸ் கடந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கேஜிஎப் அத்தியாயம் 2’ மற்றும் ‘காந்தாரா’ ஆகிய இரண்டு மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டுகளுடன் உலக அளவில் 1600 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்தது. வரவிருக்கும் வெளியீடான ‘சலார்’ ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவும் அமையவிருக்கிறது. இதன் முன்னோட்டம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘காந்தாரா – சாப்டர் 1’ எனும் திரைப்படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு மொழிகளில்.. அதன் பார்வையாளர்களை கவரும் வகையிலான திட்டமும் உள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாத இறுதியில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் தற்போது முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், படத்தின் முதல் தோற்றம்… அசாதாரணமான கதை சொல்லல் நிறைந்த ஒரு இணையற்ற உலகத்திற்கான பயணத்தை உறுதி செய்கிறது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறது. மொழிகளின் எல்லைகளைக் கடந்த ஒரு அதிவேக அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

ரிஷப் ஷெட்டி மற்றும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இணைந்து ‘காந்தாரா- சாப்டர் 1 ‘படத்தின் மூலம் தெய்வீக அனுபவத்தையும், அதன் எல்லையை மறு வரையறை செய்வதையும் தொடர்கின்றனர்.