அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்க்கும் நடிகை அவந்திகா!

162

நடிகை அவந்திகா தமிழ் சினிமாவில் கவனிக்க வைக்கும் வரவு. டி பிளாக், என்ன சொல்ல போகிறாய் படங்களின் மூலம் ரசிக்க வைத்தவர். தற்போது ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் படம், விஜய் மில்டன் இயக்கத்தில் கோலிசோடா தி ரைசிங் வெப் சீரிஸ் ஹாஸ்டார் தயாரிக்கும் மற்றுமொரு வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து நல்ல கதைகள் தேர்வு செய்து திரையுலகில் தனக்கான இடத்தை பிடிப்பதையே முதன்மை நோக்கமாக வைத்து நடித்து வருகிறார்.