ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என கலக்கும் ரிஷி ரித்விக்!

144

நடிகர் ரிஷி ரித்விக் அட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர். அப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு இவர் நடித்த டைனோசரஸ் என்ற படமும் வரவேற்பு பெற்றது. அதிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது. விக்ரம் பிரபு நடித்து இந்த தீபாவளிக்கு வெளியான ரெய்டு படத்தில் ஸ்டைலிஷான சைக்கோ வில்லனாக நடித்திருந்தார். தற்போது சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ஹீரோவாக மட்டுமின்றி குணச்சித்திரம், வில்லன் என கலக்கி வருகிறார். தான் நடித்த எல்லா படத்திலும் முடிந்தவரை சிறந்த நடிப்பை கொடுத்து வரும் ரிஷி ரித்விக் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.