இந்திய கலாச்சாரம் மற்றும் கலைப்போட்டி 2025″ –

பாடல் ,ஆடல்,ஒவியம் ,சமையல் கலக்கிய மாணவிகள்!!

2,733

 

இந்திய தூதரகம், அபுதாபி – மேடைக்கூடம்
தமிழ் மகளிர் சர்கிள் அபுதாபி
“இந்திய கலாச்சாரம் மற்றும் கலைப்போட்டி 2025” – சிறப்பாக நடைபெற்றது!

2001ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ் மகளிர் சர்கிள் – அபுதாபி வழங்கும் “இந்திய கலாச்சாரம் மற்றும் கலைப்போட்டி 2025” இந்திய தூதரகத்தின் அரங்கத்தில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலையை பறைசாற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் அரிய மேடையாக இந்த போட்டி அமைந்தது.

பதிவுகள் முழுமையாக நிறைந்ததுடன், பதிவுசெய்த போட்டியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட இந்த நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.
ஓவிய போட்டி ,பாட்டு போட்டி,தனி நடனம்,சமையல் போட்டி நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வை
Deepa’s Events
சமூக பங்குதாரர்: TEPA – தமிழ் தொழிலதிபர்கள் சங்கம்
உணவுப் பார்ட்னர் Deeba Restaurant L.L.C – அபுதாபி
மலர் பங்குதாரர்: black Tulip Florist,Murgan flowers
ஆதரவாளர்கள்: Eurotech Gas Services L.L.C, ANIB, UAE உள்ளிட்ட பலர் இணைந்து செயல்பட்டனர்.

இந்த நிகழ்வின் மூலம், அபுதாபி வாழ் இந்தியர் சமூகத்தில் கலாச்சார ஒற்றுமையும், தமிழ்மொழி பற்றும் மேலும் வலியுறுத்தப்பட்டது.

Deepu’s Event founder திருமதி மணிமேகலை (Divya), TLC president
திரு.கார்த்திகேயன் பழனி நிகழ்வின் ஏற்பாடுகளை விரிவாக செய்து இருந்தார்.

திருமதி பவ்யா, திருமதி ஜெயா ,திருமதி ஜனனி,திருமதி .உமா,திருமதி தங்கம்,திருமதி தங்கம்,திருமதி ரேவதி,திருமதி.மோனிஷா ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்…

#IndianCulture2025

Subashchandrabose Rajavelan

ValueMediaMiddleeast -Managing Editor