பக்ரீத் திருநாளை முன்னிட்டு முத்தமிழ் சங்கம் துபாயில் நடத்திய “குருதி கொடை” விழா!
குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியோடு பங்கேற்ற துபாய் தமிழர்கள்..
பக்ரீத் திருநாளை முன்னிட்டு முத்தமிழ் சங்கம் நடத்திய குருதி கொடை விழா!
உங்கள் ஒருவரின் இரத்தம்… ஒருவருக்கு வாழ்கை தரும் என்கிற உயரிய நோக்கில் ,Baraak K R Group திரு.கண்ணன்ரவி அவர்களின் மாபெரும் ஆதரவில்
மனிதத்துவம் மற்றும் தமிழரின் பெருமை நிறைந்த நிகழ்வான ரத்த தான நிகழ்வு நேற்று நடைபெற்றது.
ஒரு சொட்டு இரத்தம் – ஒரு புதிய உயிரை உருவாக்கும் என்கிற அடிப்படையில் ரத்த தான நிகழ்வை முத்தமிழ் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது.
முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு.ராமசந்திரன்மற்றும் தலைவர் திரு ஷா அவர்களின் மேற்பார்வையில் ஆகியோர் சிறப்பான வகையில் ஏற்பாடுகளை இருந்தனர்.
சிறப்பு விருந்தினராக திரு பாலஸ்கந்தன், சந்திரசேகரன் , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
,
ரத்தம் தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பராக் உணவகத்திலிருந்து பிரியாணி வழங்கப்பட்டது
Pictures: Value Media Middle East UAE
Subash chandra bose Rajavelan
Value Media Middle East -Managing Editor