கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி – 2025

212

02-06-2025, சென்னை:

மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வில் பேராசிரியர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் இறையன்பு , இயக்குனர் லிங்குசாமி, நடிகை பிரியா பவானி சங்கர், தொழிலதிபர் ஆர்.சிவக்குமார், கவிஞர்கள் பிருந்தா சாரதி, ரவி சுப்பிரமணியன், மணி சண்முகம், பதிப்பாளர் மு.வேடியப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பரிசுபெற்ற ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து டிஸ்கவரி பதிப்பகம் கொக்கோடு பறக்கும் மீன் என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.