போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை வேப்பேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திச் சென்ற வழக்கில் ஒரு பெண் உட்பட 4 நபர்கள் கைது. 108.8 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்
சென்னை பெருநகரில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படையினர் 12 காவல் மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள துணை ஆணையாளர்கள் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, சரக உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக கண்காணித்து போதை பொருள் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண்,இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக கண்காணித்து, சென்னை பெருநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக அகற்றிட சென்னை பெருநகர காவல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.N.கண்ணன், இ.கா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் முனைவர் திரு.விஜயகுமார். இ.கா.ப. அவர்கள் அறிவுரையின்பேரில், கீழ்பாக்கம் துணை ஆணையாளர் திருமதி.ஜரீனா பேகம் அவர்கள் மேற்பார்வையில் துணைஆணையர் ANIU தனிப்படை. வேப்பேரி சரக உதவி ஆணையாளர், G-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (02.06.2025) காலை, வேப்பேரி, ஜெனரல் காலின்ஸ் ரோடு ,செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்திலிருந்த மூன்று நபர்களை விசாரிக்க அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். சந்தேகம் அதிகரிக்கவே, அவர்கள் வாகனத்தில் வைத்திருந்த 2 பெரிய வெள்ளை நிற மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் முழுவதுமாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் கஞ்சா கடத்தி வந்த 1.பண்டாரு நகேஷ்வர ராவ், ஆ/வ, 30, த/பெ. நோகராஜ், 2. கஜபதி, ஆ/வ, 36, த/பெ. ராஜா, 3. தினேஷ், ஆ/வ. 23, த/பெ. அன்பழகன் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய எதிரி ரேவதி என்பவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 108.8 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரிகள் வெளி மாநிலத்திலிருந்து ரயில் மூலம் மேற்படி கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.