வியட்நாமில் உலகத்தமிழர் மாநாடு நடத்த படுவது ஏன்? சம்பா பேரரசை நிறுவியது தமிழ் மன்னனா? சித்தர் திருதணிகாசலம் பேட்டி.!!

190

தமிழ் பண்பாட்டு நடுவத்தின் முதல் உலகத்தமிழர் மாநாடு 2018 ஆம் ஆண்டு கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் நகரில் முதலாவது உலகத் தமிழர் மாநாடு நடைபெற்றது.வருகிற பிப்ரவரி 21,22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
வியட்நாமில் உலகத்தமிழர் மாநாடு நடத்த படுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மாநாட்டின் தலைவரும் புகழ்பெற்ற சித்த மருத்துவர் சித்தர் திருத்தணிகாசலம் அவர்கள் அளித்த விளக்கம் மற்றும் வரலாறு பின் வருமாறு..

கம்போடியாவில் நடைபெற்ற மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.

இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு தமிழர்களின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட வியட்நாமின் டனாங் (Da Nang) நகரில் நடைபெற உள்ளது.இரண்டாம் நூற்றாண்டில் திருமாறன் என்ற தமிழ் மன்னனால் சாம்பா பேரரசு தோற்றுவிக்கப்பட்டது.

பண்டைய பட்டுப்பாதை எனப்படும் சீனா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, மாமல்லபுரம், நாகப்பட்டினம், தொண்டி வழியாக இலங்கையைத் தொட்டு அரபு நாடுகள் வழியே ஐரோப்பாவிற்குக் கடல் வணிகம் நடந்துள்ளது பல சான்றுகள் உள்ளது. கடல் வணிகத்தில் சோழ, பல்லவ, பாண்டிய பேரரசர்கள் முக்கிய ஏற்றுமதியாளர்களாக இருந்துள்ளனர்.

சாம் பேரரசை, பாண்டி மன்னன் திருமாறனுக்குப் பிறகு செழியன், ருத்ர வர்மன், பொன் சீமான், பத்திர வர்மன், சாம்ப வர்மன், விக்ராந்தவர்மன், சிம்ம வர்மன், இந்திரவர்மன், பரமேஸ்வரர் ஆகிய மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.

வியட்நாம் நாட்டின் டனாங் கடற்கரை நகரத்துக்கு அருகில் மைசன் என்ற இடத்தில் நிறைய சைவ வைணவ கோயில்கள் உண்டு. முகலிங்கம் என்பது உலகத்தில் சிறப்பு வாய்ந்த லிங்கம் ஆகும். இதன் சிறப்பு இந்த லிங்கத்தில் சிவனின் முகம் இருக்கும். முகலிங்கம் வியட்னாமில் மைசன் நகரத்தில் இருப்பது சிறப்பாகும்.

இங்கே சிவன் கோயில் முருகன் கோயில் உள்ளது. இங்கே உள்ள சிவனுக்கும் முருகனுக்கும் மீசை இருப்பது சிறப்பம்சமாகும். இதைப் போன்றே முகலிங்கம் தமிழகத்தில் மதுரை அருகில் உள்ள பரமக்குடியில் உள்ளது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் போலவே வியட்னாமில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நான்காம் நூற்றாண்டில் சாம்பா பேரரசு சாம் என்ற புதிய மொழியைத் தமிழிலிருந்து தோற்றுவித்தது. பண்டைய சாம் மொழியில் தான் கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா நாடுகளின் பழைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சாம் மொழியும் தமிழ் எழுத்துப் போலவே க, ஞ, ச, ன, என தொடங்கி ய, ர, ல, வ, ழ, ள என முடிகிறது. என்பது ஆச்சரியமாகும்.

முன்பு சாம் மொழி சமஸ்கிருதத்திலிருந்து உண்டானது என்று தவறாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கருத்து மாறி இருக்கிறது. சாம் மொழி தமிழ் மொழியிலிருந்து வந்தது என்று இப்போதுஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்..

மாநாடு ஏற்பாடுகள் குறித்து உலகத்தமிழர் மாநாட்டின் ஊடக இயக்குனரும் ,ஜக்கிய அரபு இமிரேட்ஸின் இயங்கி வரும் Valuemedia Middle East செய்தி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன் கூறுகையில் கடந்த மாநாட்டின் போது 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இம்முறை 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழர்கள் ஒன்று கூடுகின்றனர்.
இந்த மாநாடு தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ப்பதோடு அல்லாமல் தமிழர்கள் வணிக ரீதியாக வெற்றி பெறும் வணிக தொடர்பை விரிவாக உருவாக்கும் இரண்டாம் நாள்‌ வணிக தமிழர்‌மாநாடு நடைபெறுகிறது.‌தமிழர்கள் தங்கள் செய்யும் வணிகத்தின் தன்மை வெற்றி இலக்கை எடுத்து சொல்ல பிரம்மாண்ட மேடை அமைத்து தரபட்டுள்ளது.என்றார்.
இப்படி தமிழர்களோடு நெருக்கமான வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்ட வியட்நாமில் உள்ள டனாங் நகரில் உலகத் தமிழர் மாநாடு February 21, 22. தேதிகளில் நடைபெற உள்ளது.

உலகத் தமிழர்களின் ஒன்று கூடல் மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டில், உலகெங்கும் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்து கொள்கின்றனர்.

22.02.2025 அன்று உலகத்தமிழர் வணிக மாநாட்டில்
உலகத்தமிழர்கள் தங்களுக்குள் வணிக தொடர்புகளை மேற்கொள்ள வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் யென் மாநாட்டின் ஊடக இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநாடு குறித்து தலைவர் சித்தர் திருத்தணிகாசலம் கூறுகையில்
இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், வணிகத்தலைவர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ளதை சுட்டிக்காட்டிய அவர்
வியட்நாமில் நடைபெறும் உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.