பன்னாட்டு தமிழர் நடுவத்தின் முதல் உலகத்தமிழர் மாநாடு 2018 ஆம் ஆண்டு கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் நகரில் நடைபெற்றது.வியட்நாமில் வருகிற பிப்ரவரி 21,22 ஆகிய தேதிகளில் இரண்டாவது உலகத்தமிழர் மாநாடு நடைபெற உள்ளது.
பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ் சங்கம் நடத்தும் இந்தமாநாட்டிற்கான பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலகமெங்கும் 60க்கும் நாடுகளை சேர்ந்த தமிழர் அறிஞர் பெருமக்கள் வரலாற்று ஆசிரியர்கள்,வணிக பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தமாநாட்டின் ஊடக இயக்குனராக பத்திரிகை ஆசிரியர்,ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பதிவு பெற்ற முதன்மை செய்தி ஏஜென்சி யான valuemedia middle east நிர்வாக ஆசிரியர் சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன் நியமிக்க பட்டுள்ளார்.
இவரது நியமன தொடர்பானஅறிவிப்பை பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவரும் ,வியட்நாம் உலகத்தமிழர் மாநாடு தலைவர் சித்தர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார் .
சுபாஷ் சந்திர போஸ் ராஜவேலன் 1996 விருந்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார் .சென்னை பல்கலைகழகத்தில் இதழியில் முதுகலை பட்ட பெற்றவர். பொதுவாழ்வியல் எம்பில் பயின்றவர். மபல முண்ணனி தொலைகாட்சியில் செய்தியாளராக தனது பணியை துவங்கி அரசியல் பிரிவு ஆசிரியர் ,தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர்.
தற்போது அமீரகத்தில் Value Media Middle East என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.அமீரகத்தின் அங்கீரிக்கப்பட்ட செய்தி முகமை நடத்தி வரும் முதல் தமிழர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
அபுதாபி இந்துத் கோவில் குறித்து ஆவணப்படம் மற்றும் ஆல்பம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ,வணிக விளம்பரங்களை தயாரித்து வருகிறார்.
தொடர்புக்கு
Subashchandrabose Rajavelan
Managing Editor Value mediamiddleeast UAE
valuemediamiddleeast@gmail.com