டீசர் வெளியீட்டுத் தேதியை தீபாவளி வாழ்த்துக்களுடன் புதிய போஸ்டர் மூலம் தெரிவித்த ‘குபேரா’ படக்குழு!

38

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சேகர் கம்முலாவின் ‘குபேரா’ படக்குழு கவர்ச்சிகரமான போஸ்டர் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படத்தின் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்பு முடிந்தவுடன், நவம்பர் 15-ஆம் தேதி டீசர் வெளியிடப்படுகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், ‘கிங்’ நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘குபேரா’, மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய படங்களில் ஒன்றாகும். பாடல் படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் தருவாயில் உள்ளது, இதன் மூலம் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பது உறுதியாகிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பிற்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, இது படத்தை முடிக்கும் வேகத்தை துரிதப்படுத்தியுள்ளது.

முதல் தோற்ற போஸ்டர்கள் மற்றும் குறுமுன்னோட்டங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திரங்களை தெளிவாக வேறுபடுத்தும் விதமான இந்த கவர்ச்சிகரமான போஸ்டர்கள் மூலம் தயாரிப்பாளர்கள் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். நாகார்ஜுனா மென்மையான நம்பிக்கையையும் செல்வத்தையும், அதே நேரத்தில் தனுஷ் அமைதியாக, வறுமையின் வலிமையையும், குடிசைப் பகுதிகளில் குழந்தைகளிடையே இருக்கும் ராஷ்மிகா தனது மனச்சோர்வையும் வெளிப்படுதுவதன் மூலம் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.

போஸ்டரில் குறிப்பிடுவது போல, சேகர் கம்முலாவின் ‘குபேரா’ ஒரு தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான கருத்தை ஆராய்வதுடன், முன்னணி நடிகர்களை முக்கிய வேடங்களில் கண்முன்னே கொண்டு வந்துள்ளது. நவம்பர் 15-ஆம் தேதி டீஸர் வெளியிடப்பட உள்ளது, இது கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணியைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்கவுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கீழ் சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரால் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஜிம் சர்ப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பன்மொழி திரைப்படமாக ‘குபேரா’ தயாரிக்கப்படுகிறது.