இனி வாரத்தில் 5 நாட்கள் நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ; பயணிகள் வருகை அதிகரித்ததால் இனி வெள்ளிக்கிழமையிலும் கப்பல் இயக்க நடவடிக்கை:

26

நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சிவகங்கை கப்பல் மூலம் தொடங்கியது. நாள்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது. செவ்வாய் வியாழன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படிப்படியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், இலங்கை இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் கப்பல் போக்குவரத்து சேவை செயல்படுத்த இந்த்ஶ்ரீ கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் 8ஆம் தேதி முதல் இனி வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது