பெரியார் வழியில்
பெண்களின் தீண்டாமையைப் பற்றிப்
பேசும் புதிய பாடல் ஆல்பம் ‘தீட்டு’
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார்.
மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார்.
சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா?
இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் ‘தீட்டு’ என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது.
‘தீட்டு’ ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவது,
“நமது அறிவார்ந்த முன்னோர்கள் இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தனிமைப் படுத்தினர்.
அதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிற்காலத்தினர் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுமையைப் புகுத்தின இதையே பெண்களுக்குக் காலங்காலமாக இழைத்து வருகின்றனர்.
இதைப் பற்றிய விழிப்புணர்வு ஆண்கள் மத்தியில் ஏற்பட வேண்டி உள்ளது. அதற்காகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம். நல்லதொரு துள்ளல் இசையில் பாடலாக்கி,
பெண்மையைப் போற்றும் பாடலாக உருவாக்கி இருக்கிறோம்.
பாடல் விரைவில் வெளியாக உள்ளது” என்றார்.
இந்தப் பாடல் ஆல்பத்தை இயக்கி உள்ளவர் நவீன் லக்ஷ்மன்.இதில்
ஆதேஷ் பாலா,ரதி நடித்துள்ளனர்.
பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.
பாடலை வி.ஜே.பி ரகுபதி எழுதியுள்ளார்.
பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
இந்தப் பாடல் ஆல்பத்தை
அருண்குமார், மோனிஷா நவீன் தயாரித்துள்ளனர்.