வட சென்னையில் உள்ள மெரிடியன் புற்றுநோய் மருத்துவமனை அதிநவீன எலெக்டா இன்ஃபினிட்டி இயந்திரத்தைப் பயன்படுத்தி கதிர்வீச்சு தெரபி சிகிச்சையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைக்கிறது. தமிழகத்தில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், இந்த முன்னேற்றம் இப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கை ஒளியாக உள்ளது.
புள்ளிவிவரங்கள், இந்தியாவில் புற்றுநோய் நிலப்பரப்பின் அலட்சியப்படுத்த முடியாத வரைபடத்தை வெளிக்காட்டுகிறது. 2022-ஆம் ஆண்டில் மட்டும் 14.1 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்களில் பதிவாகியுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் அதே ஆண்டு 9.1 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் பறித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதால், தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
மதிப்பிற்குரிய டாக்டர் கே.எம்.செரியன் மற்றும் டாக்டர் கீதா ஹரிப்பிரியா ஆகியோரின் முன்னிலையில், மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை தொடங்கப்பட உள்ளது. இது புற்றுநோயை முழுமையாக எதிர்த்துப் போராடுவதற்கான மருத்துவமனையின் முழு அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. விழிப்புணர்வு பேரணி, இளஞ்சிவப்பு ரிப்பன் உருவாக்கம் மற்றும் ‘புற்றுநோயிலிருந்து விடுதலை’ என்பதை பிரதிபலிக்கும் வகையிலான பலூன்களின் வெளியீடு ஆகியவை புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக அமைகிறது.
மேலும் மார்பகப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்தும் விஷயங்கள் தொடர்பான எக்ஸ்போ பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக மருத்துவமனையின் முனைப்பான அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எலெக்டா இன்ஃபினிட்டி இயந்திரத்தின் மேம்பட்ட திறன்களுடன் பொருத்தப்பட்ட, மெரிடியன் புற்றுநோய் மருத்துவமனை, துல்லியமாகவும் வேகத்துடனும் வடிவமைக்கப்பட்ட சிகிச்சைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலெக்டா இன்ஃபினிட்டி இயந்திரத்தின் உதவியுடன் திறக்கப்பட்டுள்ள இம்மையமானது வடசென்னையின் சுகாதார நிலப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. இதோடு மட்டுமல்லாமல், புற்றுநோயுடன் போராடுபவர்களுக்கு இரக்கமுள்ள மற்றும் புதுமையான சிகிச்சையை வழங்குவதற்கான மெரிடியன் புற்றுநோய் மருத்துவமனையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.